Dailyhunt
கருப்பு அரிசியில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்: காலா நமக் ஸ்பெஷல்!

கருப்பு அரிசியில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்: காலா நமக் ஸ்பெஷல்!

Kalki Online 0 months ago

ரிசியில் பல்வேறு ரகங்கள் உள்ளன. பழமையான நெல், அரிசி ரகங்களை விளைவிக்க இன்று பலரும் ஆர்வமாக உள்ளனர்.

பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான காளன் நமக் அல்லது காலா நமக் 120நாள் பயிராக வளர்ந்து விளைச்சல் தரும்.

சாத்வீக குணத்தை தரக்கூடிய இந்த காலா நமக் சிறந்த உடல்நலத்தை தரும்.இந்த அரிசியில் தயாமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலாநமக் அரிசி, வாத நோய்களை குணப்படுத்தும். நோயால் ஏற்படும் வலியைப் போக்கும். இதில் உள்ள சத்துக்கள் சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

அதே சமயம் பசியைக் கட்டுப்படுத்தும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்யும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், புற்றுநோயை குணப்படுத்த வல்லது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் தேகத்துக்கு ஆரோக்கியத்தையும்,பொலிவையும் தரும்.

காலா நமக் அரிசியை எட்டு மணிநேரம் ஊறவைத்து 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி சாதமாக வடிக்கலாம்.

இந்த அரிசியை ஊறவைத்து நிழலில் உலர்த்தி மாவாக்கவும். இந்த மாவை வேகவிட்டு பின் சர்க்கரை, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து புட்டாக செய்து சுவைக்கலாம்.

காலா நமக்கை எட்டு மணிநேரம் ஊறவிட்டு வைக்கவும். ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சிறிய துண்டுகளாக்கிய கத்தரிக்காய், பட்டை,, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சிறிது சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது அரிசி, தண்ணீர் ற்று ஆறியதும் பரிமாற சுவையான காலா நமக் வாங்கிபாத் தயார்.

சின்னச் சின்ன மாற்றங்கள்.. சிங்காரமான வாழ்க்கை! உங்கள் நாளை உற்சாகமாக்க இதோ வழி!

இந்த அரிசியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக தோல் வியாதி, சிறுநீரகப் பிரச்னை, புற்றுநோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.

இதில் மசாலாக் கஞ்சி கொழுக்கட்டை என அனைத்து வகையான பலகாரங்கள் செய்யலாம்.

இவை என் தோழி சொல்ல தொகுத்து எழுதியுள்ளேன். காலாநமக் நான் உபயோகிக்கிறேன். பலன்கள், சிறப்புகளை தெரிந்துகொண்டு எழுதியுள்ளேன்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online