Dailyhunt
காதல் கத்தரிக்காய்க்கு மகுட மாம்பழத்தை இழந்த இங்கிலாந்து மன்னர்!

காதல் கத்தரிக்காய்க்கு மகுட மாம்பழத்தை இழந்த இங்கிலாந்து மன்னர்!

Kalki Online 3 weeks ago
 Mangayar malar strip

காதலுக்காக எதை எதையோ துறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். காதலுக்காக சொத்தை, சொந்த பந்தங்களை, ஏன் அம்மா அப்பாவை துறந்தவர்கள் உண்டு.

ஆனால், காதலிக்காக அதுவும் இரண்டு முறை விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணுக்காக தன்னுடைய மன்னர் மகுடத்தை வேண்டாம் என்று சொன்ன பிரிட்டிஷ் அரசரை பற்றி தெரியுமா உங்களுக்கு?

புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் கொள்ளு பேரனும் ஜார்ஜ் ஐந்துக்கு மூத்த மகனும் ஆன எட்வர்ட் எட்டு, 1930 இல், அவர் தந்தையான ஜார்ஜ் ஐந்து இறந்த பின் இங்கிலாந்து மன்னராக முடிசூடினார்.

மிகவும் புத்திசாலி மன்னர் என்று பேரும் வாங்கினார். ஆனால் அவர் நீண்ட காலம் அரசராய் நீடிக்கவில்லை. காரணம் அவர் இருமுறை விவாகரத்தான ஒரு அமெரிக்க பெண்ணின் காதல் வலையில் சிக்கியது தான். இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது அவர்களுக்கு பிடித்த தோட்டக்கலைதான். எட்வர்ட் ஒரு மன்னர். அந்த பெண் வாலிஸ் சிம்ப்சனோ ஒரு சாதாரண பெண். நீல ரத்தம் ஓடும் அரச பரம்பரையை சேர்ந்தவர் அல்ல.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட உறவை அரச குடும்பத்தில் யாரும் அங்கீகரிக்க வில்லை. "உன் காதலியை மணக்க வேண்டும் என்றால் மகுடத்தை கழட்டி வை!" என்று கடுமையாக சொல்லி விட்டனர். கத்தோலிக்க சர்ச்சும், ஸ்பென்சர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவள் என்றாலும், அவரை விவாகரத்து செய்த இரண்டு பேரும் உயிரோடு இருந்த காரணத்தினால் விவாகத்திற்குத் தடை விதித்தது.

ஆண் ஆதிக்க வெறி... ஏன், பெண்களுக்கு ஆளத் தெரியாதா?

இப்படி நெருக்கடியில் மாட்டிய மன்னர் எட்வர்ட் மகுடத்தை துறந்து தன் காதலி ஸ்பென்சரை மணமுடிக்க முடிவெடுத்தார். அவர் யாருடைய அறிவுரைகளையும் காதில் வாங்கவில்லை. காதலுக்கு கண் மட்டுமல்ல; காதும் இல்லை என்று நிரூபித்தார் எட்வர்ட் எட்டு.

காதலியின் கை பிடிக்க நாட்டை விட்டே வெளியேறி பிரான்சில் குடியேறினார். "எனக்கு இங்கிலாந்து அரசன் என்ற பதவி தேவை இல்லை. அதை என் தம்பியான ஆல்பெர்ட்டுக்கு விட்டுக் கொடுக்கிறேன்" என்று எழுத்து மூலம் அறிவித்தும் விட்டார். அந்த ஆல்பர்ட் தான் சமீபத்தில் இறந்த எலிசபெத்தின் தந்தையும் மன்னரும் ஆன ஜார்ஜ் 5th.

அன்று எட்வர்ட் காதலி மோகத்தில் மணி முடியை கழட்டாவிட்டால் எலிசபெத் ராணியாகி இருக்க முடியாது. எங்கே வாழ்க்கை தொடங்கும்..? அது எங்கே எவ்விதம் முடியும்.?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online