Dailyhunt
கட்டடம் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

கட்டடம் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

Kalki Online 1 year ago

வீட்டின் பிரதானக்கதவு வீட்டிற்குள் நுழையும்போது மற்ற கதவுகளை விடப் பெரியதாக இருக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு இரண்டு நுழைவாயில்கள் இருப்பது மிகச்சிறந்தது.

வெளியேறும் கதவு நுழைவாயிலை விடச்சிறியதாக இருக்க வேண்டும். வீட்டிற்கு இரண்டு வெளிப்புற கதவுகள் இருந்தால் அவற்றை நேர்க்கோட்டில் அமைக்கக் கூடாது.

வீட்டிற்குள் நுழையும்போது நுழைவாயிலின் முன் சுவர் இருக்கக் கூடாது.

பிரதான கதவின் நிழல் படக்கூடாது. வீட்டின் பிரதானக்கதவு தரைக்குக் கீழே இருக்கக் கூடாது. பிரதான கதவு வீட்டின் மையத்திலோ அல்லது தீவிர மூலையிலோ இருக்கக் கூடாது.

மற்றோர் வீட்டின் பிரதான கதவுக்கு எதிரே பிரதான கதவு இருக்கக் கூடாது. இரண்டு வீடுகளின் நுழைவால் கதவுகள் ஒன்றுக்கொன்று எதிரே இருக்கக் கூடாது. இரண்டு வீடுகள் பொதுவான நுழைவாயிலை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

பிரதான நுழைவாயிலின் கீழே நிலத்தடி நீர், கழிவுத் தொட்டி, கால்வாய் இருக்கக் கூடாது. பிரதான நுழைவாயில் முன்னால் இடிந்த கட்டடங்கள் எதுவும் இருக்கக் கூடாது. பிரதான வாயிலுக்கு முன்னால் குப்பைகளை அகற்றுதல், தெருவிளக்குகள் கம்பம் அல்லது கற்பாறைகள் தவிர்க்கவும்.

வீட்டின் நுழைவாயிலை கடவுள் படங்கள் அல்லது சிலைகளால் அலங்கரிப்பது நல்லது. மோசமான படங்கள் வாசலில் இருக்கக் கூடாது. காலணிகளை கதவுக்கு முன்னால் வைக்கக் கூடாது. பக்கவாட்டில் வைக்க வேண்டும். கதவு சாய்வாகவோ, வட்டமாகவோ இருக்கக் கூடாது.

சிறுகதை: தத்து - தீர்ப்பு!

பால்கனிகள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும். தெற்கு மேற்கு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

சமயலறை வீட்டின் தென் கிழக்கு மூலையில் அமைந்திருக்க வேண்டும். சமையல் மேடை கிழக்கு நோக்கி மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

சமயலறை பிரதான கதவுக்கு நேரே அமையக்கூடாது.

கண்ணாடிகள், தொட்டிகள் மற்றும் குழாய்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கவேண்டும்.

பூஜை அறை வடகிழக்கிலோ அல்லது மத்தியப் பகுதியிலோ அமைக்க வைண்டும்.

பூஜை அறையில் மேற்கு நோக்கியவாறு கடவுள் படங்கள் இருக்க வேணடும்.

க்ரைண்டர், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை சமயலறை தெற்கு மேற்கு பகுதிகளில் வைக்க வேண்டும்.

பெண்களுக்கான, பட்ஜெட்டுக்கு ஏற்ற 5 ஸ்கூட்டர்கள்!

மாஸ்டர் படுக்கையறை தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும்.

வடமேற்கில் விருந்தினர் அறை இருக்கலாம்.

டி.வி. மற்றும் கணிணி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்

கழிவறைகள் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online