Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காட்டிலே மராத்தான் ஓடும் மான்... இருப்பினும் சிறுத்தைக்கு இரையாவது எப்படி?

காட்டிலே மராத்தான் ஓடும் மான்... இருப்பினும் சிறுத்தைக்கு இரையாவது எப்படி?

Kalki Online 1 year ago
 gokulam strip

அன்புள்ள குழந்தைகளே!

உங்களுக்கு நான் இன்று ஒரு கதை சொல்ல போகிறேன். நமது முதுமலை காட்டில் சிங்கம் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உள்ளன.

பெரிய காடு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில். அதாவது கிழக்கு தொடர்ச்சியின் மலையும் சேர்ந்து உள்ளது.

காட்டில் யானை, புலி, சிறுத்தை, கரடி, நரி, ஓநாய், மான், முயல், குறும்பு செய்யும் குரங்குகளும் இருக்கின்றன. நான் ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். விலங்குகள் பிற விலங்குகளை தின்று விடும். யானை மட்டும் இதற்கு விதி விலக்கு. புலி மற்றும் சிறுத்தைக்கு பிடித்த உணவு மான் தான். ஒரு மானை பார்த்து விட்டால் சிறுத்தை விடவே விடாது.

தொடர்ந்து ஓட, பயங்கர வேகமாக துரத்தும். மானும் சிறுத்தையை பார்த்து விட்டால், வேகமாக ஓட ஆரம்பித்து விடும். கடைசியில் சிறுத்தை மானை கடித்து குதறி விடும்.

இங்கு ஒரு விஞ்ஞான விஷயம் உள்ளது. சிறுத்தையின் வேகம் பெரிது. ஆனால், அந்த வேகத்தை விட மான் பல மடங்கு வேகமாக தாவி தாவி ஓடும். மானின் வேகம் அதிகமாக இருந்தாலும், சிறுத்தை எப்படி மானை பிடிக்கிறது ?

சிறுத்தையின் வேகம் மானின் வேகத்தை விட குறைவாக இருந்தாலும், கடைசில் மான் சிறுத்தைக்கு பலியாகி விடும். இது எப்படி சாத்தியம் ? மானுக்கு மிக அதிக வேகம் இருந்தாலும் அதற்கு சந்தேக புத்தியும் இருந்தது.

பதட்டத்தில் மான் யோசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆம். சிறுத்தை துரத்தும் போது ஒரு 5 நிமிடங்கள் கழித்து மான் நின்று விடும். சிறுத்தை வருகிறதா? எனப் பார்க்கும். இதில் பல நொடிகள், சில நிமிடங்கள் போய் விடும். சிறுத்தை வருவதை பார்த்து மீண்டும் மீண்டும் தாவி தாவி வேகமாக ஓடும்.

மீண்டும் அதே தவறு. மான் நின்று சிறுத்தை வருகிறதா? என பார்க்கும். சிறுத்தை பக்கத்தில் வந்து விட்டதை பார்த்து மான் கலங்கி ஒட்டம் எடுக்கும். அடுத்த முறை மான் நின்று பார்க்கும் போது சிறுத்தை மானை கவ்வி விடும்.

மானுக்கு வேகம் அதிகமாக இருந்தும், பதட்டத்தில் நின்று சிறுத்தை வருகிறதா? என பார்ப்பதில் நேரம் விரயமாக ஆகி விடுகிறது.

மான் என்ன செய்து இருக்க வேண்டும்? திரும்பி பார்த்து நேரத்தை வீணடிக்காமல் ஒடி இருந்தால், சிறுத்தையால் மானை பிடித்து இருக்க முடியாது.

ஆம். நாம் இலக்கை நிர்ணயித்து விட்டால் அதிலிருந்து இம்மி அளவு கூட விலகாமல் தொடர்ந்து செயல் பட வேண்டும். மான் திரும்பி பார்த்து பார்த்து நேரத்தை வீணடித்ததால் தனது உயிரையே விட்டது.

சிறுவர் சிறுகதை: தாய் சொல்லை தட்டாதே!

எனவே, வாழ்க்கை பயணத்தில் மானாக இருக்காதீர்கள். சிறுத்தை போல் இடைவிடாமல் முயற்சி செய்தால் நிச்சயமாக நம்மை வெற்றி வந்து சேரும்.

அன்புள்ள குழந்தைகளே!

குறியை நிர்ணயம் செய்து விட்டால் அதிலே மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும். திரும்பி பார்க்க கூடாது. பை..பை!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online