Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

Kalki Online 1 year ago
  • பெண் என்பவள்

பல்வேறு வடிவமாய் நிறைந்து நிற்பவள்!

தேயாத அறிவு கூர்மைக்கு சொந்தக்காரியும் அவள் தான்!

சில நேரங்களில் தேற்றுதலுக்கு கூட ஆளின்றி தவிப்பவளும் அவள் தான்!

  • மூச்சுக்காற்றில் கூட

முன்னேற்றத்தை சுவாசிப்பவளும் அவள் தான்!

சில நேரங்களில் மூச்சு விடக் கூட நேரமின்றி

உழைத்துக் கொண்டிருப்பவளும் அவள் தான்!

  • தாயாய் மாறி

அனைவரையும் தாங்குபவளும் அவள் தான்!

சில நேரங்களில் தோள் சாய கூட துணை இன்றி

குழந்தையாய் மாறி அழுபவளும் அவள் தான் !

  • குடும்பத்தில் அனைவரின்

நேரத்தையும் நிறைத்து நிற்பவளும் அவள்தான்!

சில நேரங்களில் தனக்கென கொஞ்சம் நேரம் கிடைக்காதா?

என ஏங்குபவளும் அவள் தான்!

  • எல்லோரையும் தாங்குவதில்

பூமாதேவியும் அவள் தான்!

சில நேரங்களில் ஆறுதல் சொல்ல கூட ஆள் இன்றி

வறண்டு போகும் பாலைவனமும் அவள்தான்!

  • தேடித் தேடி அனைத்தையும்

கற்றுக்கொள்பவளும் அவள்தான்!

கற்றவை அனைத்தையும் மொத்தமாய் கட்டி வைத்து விட்டு

சமையல் கட்டில் கால் தடுக்க நிற்பவளும் அவள் தான்!

  • குழந்தைகளையும் குடும்பத்தையும்

தாங்கிப் பிடிக்கும் கோபுரமும் அவள் தான்!

தன் நிழலை தாங்கிப் பிடிக்க துணையில்லாத

கோபுர கலசமும் அவள் தான்!

கவிதை: நாங்கள் கேட்பதெல்லாம்..!
  • பார் போற்றும் படித்தோர்களே!

உங்களிடம் கேட்பதெல்லாம்

ஒன்றே ஒன்றுதான்!!

பெண்ணை 'ஆகா! ஓகோ!' என ஒருபோதும் புகழ வேண்டாம்!

அவளுக்கும் ஒரு மனசிருக்கு

புரிந்து கொள்ளுங்கள் போதும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online