Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கவிதை: அழகு

கவிதை: அழகு

Kalki Online 1 month ago

அழகு என்பது நிறத்தில் இல்லை.

அழகு என்பது கோணத்தில் இல்லை.

அழகு எதில் வேண்டும்

அழகு உன் பேச்சில் வேண்டும்.

மணம் என்பது சிலபூவில் இல்லை.

மணம் என்பது சிலஉணவில் இல்லை.

மணம் என்பது எதில் வேண்டும்.

மணம், உன் பேச்சில் வேண்டும்.

ஆழம் என்பது கடலில் தேவையில்லை.

ஆழம் என்பது கிணற்றில் தேவையில்லை.

ஆழம் எதில் இருக்க வேண்டும்.

ஆழம் உன் பேச்சில் இருக்க வேண்டும்.

நகை உன் உடலில் இருக்க வேண்டாம்.

நகை உன் வீட்டில் இருக்க வேண்டாம்.

நகை எதில் இருக்க வேண்டும்.

நகை (புன்)உன் உதட்டில் வேண்டும்.

நேர்மை உன் உணவில் வேண்டாம்.

நேர்மை உன் உடையில் வேண்டாம்.

நேர்மை, முக்கியமாக

வாழ்க்கையில் வேண்டும்.

சிக்கனம் உன் எழுத்தில் வேண்டாம்.

சிக்கனம் உன் உடையில் வேண்டாம்.

சிக்கனம் எதில் வேண்டாம்.

சிக்கனம் உன் செலவில் வேண்டும்.

பாசம் என்பது ஆற்றில் வேண்டாம்.

பாசம் என்பது பாத்திரத்தில் வேண்டாம்.

பாசம் பின் எதில் வேண்டும்.

பாசம் உன் குடும்பத்தில் வேண்டும்.

கண்டிப்பு உன் உறவினரிடம் வேண்டாம்.

கண்டிப்பு உன் நண்பனிடம் வேண்டாம்.

கண்டிப்பு எதில் வேண்டும்.

கண்டிப்பு உன் குழந்தைகளிடம் வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online