Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க 10 அரிய குறிப்புகள்!

காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க 10 அரிய குறிப்புகள்!

Kalki Online 1 year ago

வீட்டில் நாம் வாங்கி வைக்கும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமான வாயுக்களை வெளியிடக்கூடியது. ஒரு சில காய்கறிகளை ஒன்றாக வைத்தால் தீங்கு விளைவிக்கும்.

ஒரு சில காய்கறிகளை ஒன்றாக வைப்பது நல்லது. நன்மைகளும் உண்டு. காய்கறிகளை நீண்ட நாட்கள் புதிதாகவும் சமையலுக்கு ஏற்றதாகவும் வைத்திருக்க 10 குறிப்புகளை காணலாம்.

1) வெங்காயம், உருளைக்கிழங்கை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது. வெங்காயத்தில் இருந்து வெளியாகும் வாயுக்கள் உருளைக்கிழங்கை வேகமாக முளைக்க வைத்து கெட்டுப்போக வைத்துவிடும். இரண்டையும் தனித்தனி கூடைகளில் காற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும்.

2) தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்ககூடாது. அதன் சுவை மற்றும் தன்மை மாறிவிடும். வாழைப்பழத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்ககூடாது. வைத்தால் அதன் தோல் கருப்பாகமாறிவிடும். பிரண்டை அறை வெப்பநிலையில்தான் வைக்க வேண்டும்.

3) காளான்களை பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல் காகித பைகளில் வைக்கவும். காகிதப்பை அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி காளான்களை வழு வழுப்பாக மாறுவது தடுக்கும். காளான் மட்டுமல்ல, மற்ற காய்கறி வகைகளையும் காகித பைகளில் வைத்தால் ஈரப்பதத்தை அது உறிஞ்சி காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும்.

4) கீரை வகைகளை காகித துண்டில் சுற்றி காற்று போகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இது ஃபிரஷ்ஷாக இருக்க உதவும்.

5) இஞ்சி மற்றும் பூண்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கி அல்லது அரைத்து சிறிய அளவுகளின் ப்ரீசரில் வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் . ஃப்ரீசரில் இடம் இல்லை என்றால் டிரேயில் வைக்கலாம்.

வீட்டிலேயே சமையலை சுவையாக்க எளிய வழிகள்!

6) கேரட் பீட்ரூட் பிரஷ்ஷாக வைத்திருக்க அவற்றின் மேல் பகுதியை வெட்டி விட்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் செங்குத்தாக வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் தண்ணீர் தினமும் மாற்றி விடவேண்டும்.

7) வெள்ளரிக்காயை குளிர்சாதன பெட்டி கதவு பகுதியில் அல்லது மிதமான குளிர்ச்சி உள்ள பகுதியில் வைத்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

8) உருளைக்கிழங்கு முளைப்பதை தடுக்க அதனுடன் ஒரு ஆப்பிளை சேர்த்து வைத்தால் ஆப்பிளில் இருந்து வெளியாகும் எத்திலீன் வாயு உருளைக்கிழங்கு முளைப்பதை தடுத்துவிடும்.

9) ப்ரோக்கோலி, காலிபிளவர் பிரஷ் ஆக வைத்திருக்க அவற்றை ஒரு ஈரமான துணியில் சுற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும். நீண்ட நாட்கள் புதியதாக இருக்க உதவும்.

10) கொத்தமல்லி புதினா பார்ஸ்லி போன்ற மூலிகைகைளை ஒரு கிளாஸ் தண்ணீரில் பூங்கொத்து போல் வைத்து அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் பை அல்லது கவர் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃபிரஷ்ஷாக இருக்கும். பச்சை மிளகாயை காம்பை எடுத்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கவும். அழுகாமலும் ஃபிரஷ்ஷாகவும் இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online