Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'கோழியைப் போல இரு' - இந்த ஒரு பழக்கம் உங்க வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்!

'கோழியைப் போல இரு' - இந்த ஒரு பழக்கம் உங்க வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்!

Kalki Online 2 weeks ago

கோழியைப்போல இருப்போமா என்பது கூட்டாக வாழும் முறை, சுய ஒழுக்கம், விழிப்புணர்வு மற்றும் பரிணாம அறிவியல் சார்ந்த சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது மனிதர்களுக்கு நேர்மறையான பல வாழ்வியல் பாடங்களையும், அறிவியல் சார்ந்த ஆச்சரியங்களையும் கற்றுத் தருகிறது.

'கோழியைப் போல இரு' என்பது ஒரு சிறந்த வாழ்க்கை முறைக்கான(chicken-life-lessons) உதாரணம். கோழி குப்பையைக் கிளறினாலும் தனக்குத் தேவையான நல்ல தானியங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். அதுபோல, வாழ்க்கையில் எத்தனை கசப்பான விஷயங்கள் மற்றும் தீமைகள் இருந்தாலும், நமக்கான நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும். தேவையற்றதை ஒதுக்கிவிட்டுத் தனக்குத் தேவையான நற்பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் கோழியைப் போன்றவர்கள். வாழ்க்கையில் இந்த நற்பண்புகளைக் கடைப்பிடிப்பது நம்மை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க உதவும்.

பல விஷயங்கள் நிறைந்த இந்த உலகில் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் குறைகளையோ, தேவையில்லாத விஷயங்களையோ கவனிக்காமல் பயனுள்ளவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். நமக்குத் தொடர்பு இல்லாத விஷயங்களை ஒதுக்குவதே சிறந்த நற்பண்பின் அடையாளமாகும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் ஆரோக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவது நல்லது.

"கோழியைப் போல இருக்க வேண்டும்" என்பார்கள், ஏன் தெரியுமா? கொட்டி வைத்த குப்பைகளைக் கிளறுகின்ற கோழியோ, எத்தனை குப்பைகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் காலாலும் மூக்காலும் தள்ளிவிட்டு, தனக்கு வேண்டிய சிறுதானியங்கள் மற்றும் சிறு பூச்சிகள் இருந்தால் அவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும்; உணவைச் சேகரிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படும். இது மனிதர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பைக் குறிக்கும்.

கோழிகள் வெறும் எளிய பறவைகள் அல்ல. அவற்றிற்கு உணர்ச்சிகள், சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆபத்தை அடையாளம் காணும் சிக்கலான மூளைச் செயல்பாடு உள்ளது என்று விலங்கியல் ஆய்வுகள் கூறுகின்றன. சூரியனின் உதயத்திற்கும் மறைவிற்கும் ஏற்ப உடலின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் மிகச் சிறந்த உயிரியல் கடிகாரம் (Biological Clock) கோழிகளுக்கு உண்டு.

குறை சொல்லும் குணம் ஒரு நோயா? அது உங்களை பாதிக்குதா? மீண்டு வருவது எப்படி?

'தலை துண்டிக்கப்பட்ட கோழியைப் போல அங்கும் இங்கும் ஓடுவது' என்றொரு சொற்றொடர் உண்டு. எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல், அவசரமாகவும் குழப்பமாகவும் ஓயாமல் ஓடுவதையும், எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படாமல் இருப்பதையும் குறிப்பதற்கு 'தலை துண்டிக்கப்பட்ட கோழி போல' என்ற சொல் வழக்கு உண்டு. எனவே, எந்தக் காரியத்தையும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

கோழி அதிகாலையிலேயே விழித்தெழுந்து தனது அன்றாடச் செயல்களைச் சிறப்பாகத் தொடங்கும். அவை எப்பொழுதும் தங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனமுடனும் விழிப்புடனும் இருக்கும்; ஆபத்துகளை முன்கூட்டியே உணர்ந்து தன் குஞ்சுகளுக்கு எச்சரிக்கையும் செய்யும். அதைப்போல் நாமும் சுறுசுறுப்புடன் அன்றாடப் பணிகளைத் தொடங்கும் நற்பண்புகளைப் பழக வேண்டும்; விழிப்புணர்வுடன் நம் செயல்களைச் செவ்வனே செய்ய வேண்டும். கோழிகள் வெறும் உணவுக்கான பறவை மட்டுமல்ல, மனித வாழ்வியலோடு இணைந்த ஒரு விசித்திரமான உயிரினமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online