Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 கணிப்பு: வேதா கோபாலன்

Kalki Online 2 years ago
  Vedha Gopalan

ல்கி இணையதள வாசகர்களுக்கு வணக்கம். 2024 மே மாதம் 1ம் தேதி (இன்று) குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார்.

13.04.2025 வரை அவர் அங்கிருப்பார். இதனால் 12 ராசிகளுக்கும் நற்பலன்களே அதிகம் உள்ளன. ரிஷபத்திலிருந்து கன்னி, விருச்சிகம் மற்றும் மகர ராசிகளைப் பார்க்கவிருப்பதால் இந்த ராசிகளுக்குக் கூடுதலான நற்பலன்களை எதிர்பார்க்கலாம். இனி, பன்னிரண்டு ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 6, 8 மற்றும் 10ம் வீடுகளைப் பார்க்கிறார். மத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லதுங்க. குடும்பத்துல இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவாங்க. வெளியூர்ப் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். தொழில், வியாபாரம் தொடர்பான டென்ஷன்ஸ் மறையும். லாபம் கிடைக்கப் பெறுவீங்க. அரசியல்வாதிகளுக்கு வெற்றிக்கான சான்ஸ் அதிகமாகும். கடந்த காலத்துல உங்களை விட்டுப் போனவங்க, விரும்பி வந்து சேருவாங்க. ஸ்டூடன்ட்ஸ் பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனசுல பதிய வைச்சுக்கறது நல்லது.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு வரும் குரு பகவான் உங்களது 5, 7 மற்றும் 9ம் வீடுகளைப் பார்க்கிறார். திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் வேலைக் கிடைக்கும். வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். தந்தைக்கு நன்மைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாரேனும் தவறு செய்து ஒதுங்கியிருந்தால் தனது தவறை உணர்ந்து திருந்துவார். எதிரிகள் காணாமல் போவதால் மனதுக்கு நிம்மதி வரும். அப்பாவுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி, அவர் ஆதரவு உங்களுக்கும், உங்கள் ஆதரவு அவருக்கும் கிடைத்து மகிழ்வீர்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 12ம் வீட்டுக்கு வரும் குரு பகவான், உங்களது 4, 6 மற்றும் 8ம் வீடுகளைப் பார்க்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீங்க. வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துல உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் குறைய ஆரம்பிக்கும். செலவு செய்தாலும் அது இன்வெஸ்ட்மென்ட் அல்லது சுப செலவாகவே இருக்கும். அம்மாவுக்கும் உங்களுக்கும் அன்புப் பாலம் இறுகும். நல்ல நண்பர்கள் கிடைப்பாங்க. அவர்கள் உதவுவாங்க. லேடீஸ் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்னைகளையும் தீர்த்து விடுவாங்க. கலைத்துறையினருக்கு தொழிலில் அபார முன்னேற்றம் இருக்கும். இத்தனை காலம் பயமுறுத்திக்கொண்டிருந்த ஆரோக்கியம் சீராகும். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் கவனமாயிருந்தால் போதும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 11ம் வீட்டுக்கு வரும் குரு பகவான், உங்களது 3, 5 மற்றும் 7ம் வீடுகளைப் பார்க்கிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய ஃப்ரெண்ட்ஸ் சேர்க்கையால் ஹெல்ப் கிடைக்கும். பணவரத்து லேசாய் இன்கிரீஸ் ஆகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவீங்க. குடும்ப வேலைகளைக் கூடுதல் நேரம் ஒதுக்கிச் செய்து முடிக்க வேண்டியிருக்குங்க. தொழில், வியாபாரம் சுமாரா இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஹெல்ப் கிடைக்கும். லேடீஸ் பல வகைகளில் வெற்றி பெறுவாங்க. லாபம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். குழந்தைங்க சந்தோஷமளிப்பாங்க.

 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

சிம்மம்

உங்கள் ராசிக்கு 10ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 2, 4 மற்றும் 6ம் வீடுகளைப் பார்க்கிறார். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவங்க தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகம் பார்க்குமிடத்தில் நல்ல வழிகாட்டி கிடைப்பார். குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சுப நிகழ்ச்சிகளும் கூடும். வாகனம், வீடு வாங்குவீங்க. நண்பர்கள் உதவுவாங்க. அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ரொம்ப நாளா உங்களுக்கு ஒருத்தர் கூட இருந்த மனத்தாங்கல் மறையும். பூமி தொடர்பான இழுபறி பிரச்னை நிலை மாறும். குடும்பத்தினரோட செயல் மன மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 9ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது ராசியையும், 3ம் வீட்டையும் மற்றும் 5ம் வீட்டையும் பார்க்கிறார். கடந்த வருடம் இருந்த அத்தனை கஷ்டங்களும் மாறும், மறையும். தங்கம் வாங்குவீங்க. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சகோதரர்களோட சண்டை தீரும். குழந்தைங்க சந்தோஷமும் பெருமிதமும் அளிப்பாங்க. வழக்குகளில் சாதகமான நிலையைப் பெறுவீங்க. குடும்பத்துல குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். தொழில், வியாபாரத்துல இருந்து வந்த மந்த நிலை மாறும். வரவேண்டிய பணம் கைக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். போட்டிகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்குப் பதவியும் சம்பளமும் உயரும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 8ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 12, 2 மற்றும் 4ம் வீடுகளைப் பார்க்கிறார். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீங்க. வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். சொத்து, வீடு போன்றவை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்துல வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீங்க. தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். உறவினர் வருகை இருக்கும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 7ம் வீட்டுக்கு வரும் குரு பகவான், உங்களது 11, உங்களின் ராசி , மற்றும் 3ம் வீடுகளைப் பார்க்கிறார். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீங்க. வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். லேடீஸுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் படிப்படியாய் கைகூட ஆரம்பிச்சு ஹாப்பியா ஆயிடுவீங்க. சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்கக் கூடும். உத்தியோகத்துல உள்ளவங்க தங்களது பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து விடுவாங்க.

 குரு பகவான்

தனுசு

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 10, 12 மற்றும் 2ம் வீடுகளைப் பார்க்கிறார். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். குடும்பத்துல கொஞ்ச நாளா இருந்துக்கிட்டிருந்த இறுக்கம் நீங்கி, மனம் மகிழ்ச்சியடையும் விதமான சம்பவங்கள் நடக்கலாம். ஃபேமிலிக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. தொழில், வியாபாரத்துல இருப்பவர்கள் பேச்சின் இனிமை, புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவாங்க. சிலருக்குப் புதிய ஆர்டர்களோ அல்லது ஃபாரின் ஆர்டர்களோ கிடைக்கும் லேடீஸுக்கு புதிய நபர்களின் அறிமுகம், நன்மை உண்டாகும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காணுவாங்க. அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றியும் சந்தோஷமும் இருக்கும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 5ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 9, 11 மற்றும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நல்லவிதமாய் மெதுவாக நிறைவேற ஆரம்பிக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்துல கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரிச்சு நிம்மதியளிப்பாரு. தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நல்லாவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் சுறுசுறுப்பு காட்டுவீங்க. உத்தியோகத்துல உள்ளவங்க முன்னேற்ற நிலை காண்பர். மனசுல இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும்.

ராஜ யோகம் தரும் திட்டை குரு பகவான்!

கும்பம்

உங்கள் ராசிக்கு 4ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 8, 10 மற்றும் 12ம் வீடுகளைப் பார்க்கிறார். மனக் குழப்பம் நீங்கும். அரசியல்வாதிங்க நல்ல பெயர் வாங்குவீங்க. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டு அதை ஒரு நல்ல வழிகாட்டி ஆசிரியர் தீர்த்து வைப்பார். அந்த ஆசிரியரின் அன்புக்கு ஆளாவீங்க. தொய்வு நிலை நீங்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனசுல தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச் செய்து வெற்றி பெறுவீங்க. அரசாங்க ரீதியிலான ஹெல்ப் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்துல கலகலப்பு இருக்கும். கூடவே மனசுல ஒருவித கவலையும் இருந்து வரும். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை அடியோடு மாறும். எதையும், யாரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும்.

மீனம்

உங்கள் ராசிக்கு 3ம் வீட்டுக்கு வரும் குரு பகவான் உங்களது 7, 9 மற்றும் 11ம் வீடுகளைப் பார்க்கிறார். மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது, கெட்டது எதுன்னு பிரிச்சுப் பார்த்து செயல்படுவீங்க. எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்துல சுபச்செலவு ஏற்படும். உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரம் திருப்தி தரும். அரசாங்க ஹெல்ப் கிடைக்கும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்கப் பெறுவர். லேடீஸ் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online