Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குட்டீஸ்களா.. கோடையில் கருப்பு நிறம் ஆபத்து! ஏன் தெரியுமா?

குட்டீஸ்களா.. கோடையில் கருப்பு நிறம் ஆபத்து! ஏன் தெரியுமா?

Kalki Online 1 month ago

கோடை காலத்தில் வெயிலில் நடந்து செல்லும் பொழுது பலரும் வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தலையில் தொப்பியை வைத்துக் கண்டு அல்லது கையில் குடையை விரித்து செல்கின்றனர்.

இதனால் ஓரளவு நேரடி வெப்பத்தை தடுக்க முடியும்.

கோடை காலம் மற்றும் கருப்பு நிறத்தின் பின்னணி:

கருப்பு என்பது ஒரு நிறம் இல்லை. ஒன்றுமே இல்லாத இடம் கருப்பாக இருக்கும். VIBGYOR என்று அழைக்கப்படும் வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு கலர்களுமே இல்லாத ஒன்று கருப்பாக இருக்கும்.

அந்த நிறத்தின் மீது எந்த நிற ஒளிக்கதிர் பட்டாலும் கருப்பு அவற்றை உட்கிரகித்துக் கொள்ளும். அதனால் சூரியனிடமிருந்து வரும் வெண்ணிற ஒளிக்கதிர்களை கருப்பு நிற குடை வாங்கி தங்க வைத்துக் கொள்ளும். அதுபோல்தான், தொப்பியும்..

சூரியனிடமிருந்து வரும் வெப்பமும் துணியினால் கிரகிப்பட்டு கதிர் வீசல் முறையில் கீழே இறங்கி குடைக்கு கீழே உள்ளவர்களை அது தாக்கும். அதனால் கருப்பு நிற குடைகளை வெயில் காலத்தில் பிடித்துச் சென்றால் அதிகமாக வியர்க்கும் கோடை கட்டிகள், சரும வியாதிகள் ஆகியவை வர வாய்ப்புண்டு.

கோடை காலம் பாதுகாப்பிற்கு சிறந்த நிறம் எது?

 கோடை காலம்

வெண்மை என்பது ஒரு நிறமன்று. அது மேலே கண்ட ஏழு வண்ணங்களின் தொகுப்பே ஆகும். குடையின் மீது வெண்ணிற குடையை வாங்கி வெயிலுக்கு பிடித்து சென்றால் அதன் மீது படும் சூரிய ஒளி கதிர்களை அது கிரகிக்காமல் மேல் நோக்கி திருப்பி அனுப்பி விடும். இதனால் தான் கோடைகாலத்தில் வெள்ளை நிற தொப்பியையோ, வெள்ளை நிற குடையையோ பயன்படுத்த வேண்டும்.

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 10!

வெள்ளை நிற தொப்பியை தலையில் வைத்துக் கொண்டாலும் சூரியனின் உஷ்ணக் கதிர்கள் நம்மை தாக்காது. அதேபோல வெள்ளை நிற குடையை பயன்படுத்தினாலும் கோடையினால் ஏற்படும் வெப்பம் நம் உடலில் தாக்காமல் நம்மை பாதுகாக்கும். அதனால் கோடைகாலத்தில் எக்காரணம் கொண்டும் கருப்பு நிறத்தொப்பியோ, கருப்பு நிற ஆடைகளோ கருப்பு நிற குடையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கோடைகாலத்தில் பயன்படுத்த கூடாத ஒரு கலர் என்றால் அது கருப்பு நிறம் தான்.. புரிந்ததா குட்டீஸ்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online