சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற பழைய திரைப்படங்களை , நவீன தொழில்நுட்பத்தில் அதன் மெருகேற்றி ரீரிலீஸ் செய்து வருகின்றனர்.
ஒரு திரைப்படத்தை மறுவெளியீடு செய்யும் போது அதற்கு ஆகும் செலவினம் மிகவும் குறைவு என்பதாலும் ஒன்றிரண்டு நாட்கள் ஓடினாலே லாபத்தை பார்க்க முடியும், என்பதாலும் நிறைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி விட்டதால், அவரது பழைய வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு நல்ல மவுசு உள்ளது. இனி விஜய் புதிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால், அவரது பழைய திரைப்படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் விஜயின் 'கில்லி' மற்றும் 'சச்சின்' ஆகிய திரைப்படங்கள் மறுவெளியீட்டில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. கில்லி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த மறு வெளியீட்டு திரைப்படம் என்னும் சாதனையை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா நடித்து ,பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான ' திருப்பாச்சி' திரைப்படம் மறுவெளியிட்டிற்கு தயாராக உள்ளது. அண்ணன் தங்கை சென்டிமென்ட்டை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், அப்போது மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் ,தற்போது விஜயின் திருப்பாச்சி திரைப்பட மறு வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி இருந்த 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியிட தயாராக இருப்பதால் , இந்த முடிவினை திருப்பாச்சி திரைப்பட தரப்பினர் எடுத்துள்ளனர். ஏற்கனவே சிக்மா திரைப்படம் வெளியிடப்பட வேண்டிய வாரத்தில் , விஜய்யின் இறுதிப் படமான 'ஜனநாயகன் ' வெளியாக இருந்ததால் , அப்போது சிக்மா திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
thiruppachi அப்போது மகன் விட்டுக் கொடுத்ததால் , இப்போது அப்பா விட்டுக் கொடுத்துள்ளார், என்று சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். ஒரே நேரத்தில் அப்பா மகன் திரைப்படம் வெளியானால், திரையரங்குகளை பிரிப்பதில் சிரமம் ஏற்படும், மேலும் ஒரு திரைப்படத்தின் வெற்றி கடுமையாக பாதிக்கப்படும். ஜேசன் சஞ்சய் புதியவர் என்பதால் அவரது திரைப்படத்தின் தாக்கம், திருப்பாச்சி திரைப்படத்தின் முன் எடுபடுவது கடினம். மேலும் விஜயின் ரசிகர்களும் அவரது வாரிசு திரைப்படத்தை கொண்டாட நினைக்கின்றனர். இது போன்ற காரணங்களினால் திருப்பாச்சி மறு வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பாச்சி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அக்டோபர் முதல் நாள் திரையரங்கில் மீண்டும் வெளியாகவிருந்த 'திருப்பாச்சி' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்துவரும் மாபெரும் வரவேற்பிற்கும், அன்பிற்கும் நன்றி. தற்போதைய சூழலில், பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளதால், அந்தப் புதிய படைப்புகளை முழுமையாக ஊக்குவிக்கவும், தமிழ்த் திரையுலகின் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும், 'திருப்பாச்சி' திரைப்படத்தின் மறுவெளியீட்டைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திருப்பாச்சி மறுவெளியிட்டிற்கு காத்திருக்கும் விஜயின் ரசிகர்களுக்கு சிறப்பான சர்ப்ரைஸ் இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.அது உங்கள் திரையரங்கக் காட்சியனுபவத்தை மேலும் பெருவிழாவாக மாற்றும்" என தெரிவித்துள்ளது.அது உங்கள் திரையரங்கக் காட்சியனுபவத்தை மேலும் பெருவிழாவாக மாற்றும்" என தெரிவித்துள்ளது.

