Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களே உஷார்! செப்டம்பர் 1 முதல் உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்கும் அதிரடி மாற்றங்கள்..!

மக்களே உஷார்! செப்டம்பர் 1 முதல் உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்கும் அதிரடி மாற்றங்கள்..!

Kalki Online 2 weeks ago

ன்னும் சில நாட்களில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. செப்டம்பர் 1 முதல் வங்கி, எல்பிஜி கேஸ், மற்றும் சர்வதேச பயணம் தொடர்பான பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் மற்றும் சேமிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, செப்டம்பரில் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

சமையல் கேஸ் விலை:

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வணிக பயன்பாட்டு எல்பிஜி (LPG) சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. அதன்படி கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி, 19 கிலோ எடைகொண்ட வணிக LPG சிலிண்டரின் விலை ரூ.33.50 குறைக்கப்பட்டது.

ஆனால் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பர் 1-ம்தேதி LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலையில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LPG இ-கேஒய்சி:

எல்பிஜி எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சமையல் எரிவாயு இணைப்பிற்கான இ-கேஒய்சி அப்டேட் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி தேதியாகும். செப்டம்பர் 1 முதல் இ-கேஒய்சி செய்ய முடியாது. ஆதார் பயோமெட்ரிக் அடிப்படையிலான இந்த செயல்முறை கட்டாயமாகும். இதை முடிக்கவில்லை என்றால், மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காமல் போகலாம். எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்க, இந்தச் செயல்முறையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டியது கட்டாயம்.

PNG ஊக்கத் திட்டம்:

வீடுகளுக்குக் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஒரு ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செப்டம்பர் 1 முதல் தொடங்குகிறது. அரசின் கூற்றுப்படி, தற்போது நாட்டில் 1.74 கோடி வீட்டு உபயோக PNG இணைப்புகள் உள்ளன. இந்தப் புதிய திட்டமானது, PNG வலையமைப்பை புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதையும், தற்போது கட்டணம் வசூலிக்கப்படாத இணைப்புகளைச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

eKYC - ரேஷன் கார்டு பதிவு:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் eKYC பதிவை முடிக்க வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ், முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ஆகிய குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்துப் பயனாளிகளின் ஆதார் எண்களையும், அவர்களின் கைரேகை (Biometric) அடிப்படையில் 100% துல்லியமாகச் சரிபார்ப்பதே (eKYC) இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் ரேஷன் கார்டில் உள்ள போலியான பெயர்களைக் கண்டறிந்து அதனை நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

eKYC செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்குதில் சிக்கல் ஏற்படலாம். அதோடு, உங்கள் ரேஷன் கார்டை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.

ஐடிஆர் தாக்கல் காலக்கெடு:

மே 27 அன்று, நிதி அமைச்சகம் 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அறிவித்தது.

அதன்படி 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year 2026-27) வருமான வரிக் கணக்கைத் (ITR) தணிக்கை தேவையில்லாத வணிகம் மற்றும் தொழில் வருமானம் பெறும் வரி செலுத்துவோர் ஆகஸ்ட் 31, 2026-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ITR-4 அல்லது 'சுகம்' (Sugam) திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கும், ரூ.50 லட்சம் வரை வணிக வருமானம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். ITR-4-ன் வரம்பிற்குள் வராதவர்களுக்கு ITR-3 பொருந்தும்; உதாரணமாக, ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், முழுமையான கணக்கு விவரங்களைப் பராமரிப்பவர்கள் அல்லது F&O (Futures and Options) வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இதில் அடங்குவர்.

ETF வர்த்தக விதிகள்:

ETF வர்த்தகர்களுக்கான மிகப்பெரிய மாற்றம், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆகும். இந்த ஒழுங்குமுறை ஆணையம், ETF-களுக்கான விலை நிர்ணயம், உச்சவரம்பு விலை மற்றும் தொடக்க வர்த்தக விதிகளைத் திருத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.

புதிய விதிகளின்படி, ஒரு ETF-க்கான விலை உச்சவரம்பு, முந்தைய வர்த்தக நாளின் கடைசி 30 நிமிடங்களின் வர்த்தக அளவின் அடிப்படையில் கணக்கிடப்படும் சராசரி விலையைச் சார்ந்து இருக்கும் . இது ஒரு ETF-ன் வர்த்தக விலையைத் தற்போதைய சந்தை நிலவரங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மாற வாய்ப்பு:

செப்டம்பர் மாதத்தில் ஏடிஎம் கட்டணங்களும் மாறக்கூடும். வங்கிகள் அல்லது அது சார்ந்த நிறுவனங்கள் இந்தக் கட்டணங்களை மாற்றினால், நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை மீறும் வாடிக்கையாளர்களின் செலவினங்கள் பாதிக்கப்படலாம் . எனவே, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் உங்கள் வங்கியின் புதிய ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் விதிகளைத் தவறாமல் சரிபார்க்கவும்.

ஜிஎஸ்டி அடுக்குகளில் மாற்றங்கள்:

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதன் பிறகு வரி அடுக்குகளில் பல மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 விமான நிலையங்கள் | Airport

விமான பயணிகளுக்கு வரும் மாற்றம் :

செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றத்தின் மூலம், இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் Immigration சோதனையின் போது தங்கள் காகித போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்திக் கொள்ளும் நடைமுறை தலைவலியாக இருந்து வந்தது.

சில போர்டிங் பாஸ்களில் தவறான அல்லது தெளிவற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதால், பார்கோடு போன்ற விவரங்களைப் படிப்பதில் இயந்திரங்களுக்கு பிழைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வந்ததாலும் சீல் வைப்பதால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இனி காகித போர்டிங் பாஸ் மட்டுமல்லாது தங்கள் ஸ்மார்ட்போன்களில் மின்னணு முறையிலான போர்டிங் பாஸ்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விமான நிலையப் பயணம் எளிதாகும். இந்த விதி இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்யும் சர்வதேசப் பயணிகளுக்குப் பொருந்தும்.

எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 1 முதல் சில மின்சார மற்றும் விரைவு ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி, குறிப்பிட்ட ரெயில்களின் புறப்படும் நேரம், வழித்தடம் அல்லது சேவை தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதால், பயணிகள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..! யூபிஐ முதல் சிலிண்டர் வரை வரும் முக்கிய மாற்றங்கள்..!

சுங்கக் கட்டணம் உயர்கிறது:

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

ஒரே நாளில் கார், ஜீப் போன்ற வாகனங்கள் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.105-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வணிக வாகனங்களுக்கு ஒரு முறை பயண கட்டணம் ரூ.120-லிருந்து ரூ.125-ஆகவும், பலமுறை பயண கட்டணம் ரூ.180-லிருந்து ரூ.185-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி, பேருந்துகளுக்கு ஒருமுறை பயண கட்டணம் ரூ.10 உயர்வு.. பலமுறை பயணிக்கும் லாரி, பேருந்துகளுக்கு ரூ.15 கட்டணம் உயர்வு.. மல்டி ஆக்சில்((Multi Axle) வாகனங்களுக்கு ரூ.20 வரை கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.

கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கள்ளழகர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கருவறைகளை புகைப்படம் எடுப்பது மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SBI கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? ஜூலை 1 முதல் மாறப்போகும் முக்கிய விதிகள்!

கோவிலுக்குள் செல்லும் முன் கைபேசியை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். கோவில் நுழைவாயில் அல்லது காலணி பாதுகாப்ப மையம் அருகே கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படும்.

VIP-க்கள் பிரபலங்கள் உள்ளிட்ட யாருக்கும் கோவிலுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதி இல்லை.

அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

- எனவே, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் புதிய கட்டணங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்துக் கவனத்தில் கொள்வது அவசியமாகும். இந்த மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்பத் தயாராவது நல்லது.

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்!

இது பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்ய உதவும். அதேபோல், இது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

டாடா கார் விலை உயருகிறது :

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை செப்டம்பர் 1 முதல் ரூ.25,000 வரை உயர உள்ளது. பணவீக்கம், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு, பேட்டரி செலவு அதிகரிப்பு, அந்நிய செலவாணி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களில் சிலவற்றுக்கு பொருந்தும். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு உயர்வு என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online