Dailyhunt
மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் 9 சிந்தனைத் துளிகள்!

மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் 9 சிந்தனைத் துளிகள்!

Kalki Online 1 year ago

மாணவ மாணவியரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும் 9 அற்புதமான கருத்துகளை பார்ப்போம், பகிர்வோம், பயனடைவோம்!

1. கடிகாரத்தைப் பார்க்காதே. அது செய்வதை நீயும் செய் (Do not watch the clock. Do what it does. Keep going) : சோர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து விடாமல் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இரு.

2. அறிவே பலம் (Knowledge is Power): கல்வி, உனக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர உதவும் மாபெரும் சக்தி .

3. வெற்றியாளர்கள் வெளியேறுவதில்லை; வெளியேறுபவர்கள் வெற்றியடைவதில்லை (Winners never quit and quitters never win): வெற்றி அடைய விடா முயற்சி தேவை. விட்டு ஓடினால் வெற்றி கிட்டாது.

4. கல்விக்காக செய்யும் முதலீடு சிறந்த வட்டியைப் பெற்றுத் தரும் (An investment in knowledge pays the best interest): கல்வி எனும் முதலீடு வாழ்க்கையில் நிச்சயமாக சிறந்த பலனைப் பெற்றுத் தரும்.

5. சந்தர்ப்பங்கள் தானா வருவதில்லை, நாமே உருவாக்குவது (Opportunities don't happen, you create them): முன் கூட்டியே செயல்பட்டு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்.

கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்!

6. சந்தேகம் கனவுகளைக் கொல்வது போல் தோல்வி கொல்வதில்லை (Doubts kill more dreams than failure ever will): இலக்கை அடைய தன்னம்பிக்கையே ஆதாரம். தோல்விகளை விட சந்தேகங்கள் கொடியவை.

7. சத்தமின்றி கடின உழைப்பைக் கொடு, வெற்றி ஆர்ப்பரிக்கட்டும் (Work hard in silence, let success make noise): நீ அமைதியாய் இரு.. உன் சாதனைகள் பேசட்டும்.

8. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை (Rome was not built in a day): பெரிய சாதனைகளை அடைய அதிக நேரமும் பொறுமையும் தேவை.

வாழ்க்கையில் சமரசம்: பிடிவாதம் விட்டு, விட்டுக் கொடுத்தால் முன்னேற்றம்!

9. அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க உதவாது (A smooth sea never made a skilled sailor): கஷ்டமான சூழ்நிலைகள் நமக்கு விலை மதிப்புள்ள திறமைகளையும் சோதனைகளைக் கடந்து மீண்டு வரவும் கற்றுத் தருகின்றன.

மேலே கூறிய பழமொழிகளின் அர்த்தத்தை உள்வாங்கிப் புரிந்து கொண்டு மாணவர்கள் பின் பற்றி வந்தால் வெற்றி அவர்களைத தேடி வரும் என்பது திண்ணம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online