Dailyhunt
மனித மிருகங்களை விரட்டி அடிப்போம்!

மனித மிருகங்களை விரட்டி அடிப்போம்!

Kalki Online 1 year ago

நாமும்...

தாயின் வழியே பிறந்தோம்,

தாய்ப்பால் குடித்தோம்,

தமக்கைகளுடன் வளர்ந்தோம்,

ஆசிரியைகளிடம் பாடம் பயின்றோம்,

ஒர் நல்ல பெண்மணியை மணந்தோம்,

மணி, மணியான பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தோம்

இதில் கொடுமை என்னவென்றால், நாமே....

பெண்மணிகளை வக்கிறக் கண் கொண்டு பார்க்கிறோம்,

போதைப் பொருளாகக் கருதுகிறோம்,

இச்சையுடன் பார்க்கிறோம், அவர்களைப் பற்றி

கொச்சையாகப் பேசுகிறோம்,

உடல் மட்டுமல்லாது மனதளவிலும் காயப்படுத்துகிறோம்,

அசிங்கபடுத்துகிறோம், கற்பழிக்கிறோம்,

கொலை செய்யவேத் துணிகிறோம்.

இப்படி ஒரு இழிவானச் செயலைச் செய்ய,

சில ஆண்களுக்கு எங்கிருந்து வருகிறது இந்த ஈனப் புத்தி என வியக்கிறோம்!

மாபெரும் இசையமைப்பாளர் 'இசை வசந்தம்' எஸ்.ஏ.ராஜ்குமார்!

பாரதமாதாவின் மீது சபதம் எடுப்போம் …..

பொங்கி எழுவோம்!

இக்கொடுமை இனி ஒரு பெண்ணிற்கும் வராமல் தடுப்போம்!

நம் நாட்டின் பெண்களை நம் கண்களாகப் கருதிப் பாதுகாப்போம்!

மனித மிருகங்களை வேட்டையாடுவோம்!

விரட்டி அடிப்போம்! தகுந்த தண்டனைப் பெறச்செய்வோம்...

என உறுதி மொழி எடுப்போம்!

- ஓர் ஆண்மகன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online