Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மரவள்ளிக்கிழங்கில் அசத்தலான 2 ரெசிபிகள்: இட்லி & சிப்ஸ்!

மரவள்ளிக்கிழங்கில் அசத்தலான 2 ரெசிபிகள்: இட்லி & சிப்ஸ்!

Kalki Online 3 months ago

ட்டச்சத்தும், அதிகளவு மாவுச்சத்து கொண்ட மரவள்ளிக்கிழங்கு அதிக கலோரிகள் கொண்டது. வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

ஒரு கப் மரவள்ளிக்கிழங்கில் 558 மி.கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. மரவள்ளியில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்னைகளிலிருந்து விடுவிக்க உதவுகிறது.

மரவள்ளிக்கிழங்கு இட்லி :

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

அரிசி மாவு - 150 கிராம்

நாட்டுச்சர்க்கரை - 200 கிராம்

உப்பு - சிறிதளவு

தேங்காய் துருவல் - 200 கிராம்

காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப்

நெய் - தேவையான அளவு

செய்முறை :

மரவள்ளிக்கிழங்ங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். துருவிய மரவள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் அரிசி மாவு, நாட்டுச்சர்க்கரை, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து மாவை திக்கான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இட்லி தட்டில் சிறிது நெய் தடவி அதில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு இனிப்பு இட்லி ரெடி.

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் :

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு - பெரியது 1

தனி மிளகாய் தூள்- தேவையான அளவு

மிளகு தூள் - தேவையான அளவு

கரம்பமலாசா தூள் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

ஒரு சிறிய கிண்ணத்தில் தனி மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி துருவலில் வைத்து மெல்லிய வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மரவள்ளிக்கிழங்கு வில்லைகளை போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். (எண்ணெய் சலசலப்பு அடங்கியது)

அடுத்து பொரித்த மரவள்ளிக்கிழங்கை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சூடு ஆறியதும் அதில் கலந்து வைத்து மசாலாவை தூவி நன்றாக குலுக்கி எடுத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் ரெடி.

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை காற்று போகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை சாப்பிடு சூப்பராக இருக்கும்.

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த இரண்டு ரெசிபிகளையும் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online