Dailyhunt
மாதாந்திர பென்ஷன் தரும் முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) - ஒரு விளக்கம்!

மாதாந்திர பென்ஷன் தரும் முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) - ஒரு விளக்கம்!

Kalki Online 1 week ago

ரே ஒருமுறை ரூ.5 லட்சம் முதலீடு செய்து, ஓய்வு காலத்தில் மாதம் ரூ.1.75 லட்சம் பென்ஷன் பெறுவது சாத்தியமே.

இதற்கு கூட்டு வட்டியின் (Compounding) வலிமையும், முறையான திரும்பப் பெறும் திட்டமும் (SWP) அவசியம்.

ஓய்வூதிய திட்டமிடல் என்பது வெறும் சேமிப்பு மட்டுமல்ல; அது பணவீக்கத்தையும் தாண்டி வாழ்க்கை முறையைத் தடையின்றித் தொடர உதவும் ஒரு சொத்து தளத்தை உருவாக்குவதாகும். பலரும் 30களின் தொடக்கத்தில் இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்று தள்ளிப் போடுவார்கள்.

ஆனால் காலம் செல்ல செல்ல பணவீக்கம் இலக்கை பெரிதாக்கும். கூட்டு வட்டியின் பலன் குறைவதால் இலக்கை அடைவதற்கு அதிகத் தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே சீக்கிரம் முதலீடு செய்வதே சிறந்தது. சீக்கிரம் முதலீடு செய்யத்தொடங்கினால் கூட்டுவட்டி முறை நம் பணத்தை வளர்க்கும். காலதாமதம் செய்தால் அதே இலக்கை அடைவதற்கு நாம் அதிக தொகையை செலவிட நேரிடும்.

30 வயதில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து, 60 வயதில் மாதம் ரூ.1.75 லட்சம் பென்ஷன் பெற, மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட்டு வட்டி (Compounding) மற்றும் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் Systematic Withdrawal Plan (SWP) மூலம் இது சாத்தியமாகும்.

இந்த திட்டம், நீண்ட கால முதலீட்டின் மூலம் பெரிய நிதி ஆதாரத்தை (Corpus) உருவாக்கி, ஓய்வு காலத்திற்குப் பின் பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை உறுதி செய்கிறது. இந்த கணக்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நடைமுறையில் நாம் ஓய்வு பெறும் வயது, பண வீக்கம் மற்றும் நம் இடர் தாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து இதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்:

கூட்டு வட்டி மூலம், இந்த ரூ.5 லட்சம் 60 வயதில் சுமார் ₹1.5 கோடிக்கு மேல் வளரக்கூடும். சிஸ்டமேடிக் வித்ட்ராயல் பிளான் மூலம், அந்த ரூ.1.5 கோடியிலிருந்து மாதம் ரூ.1.75 லட்சம் வரை எடுக்க முடியும்.

எரிவாயு பயன்பாட்டைக் குறைப்போமா? - எரிசக்தி தட்டுப்பாட்டிற்கான மாற்று வழிகள்!

இந்த கணக்கீடு மியூச்சுவல் ஃபண்டுகளில் சராசரியாக 12-15% வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.

பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. சந்தை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து பென்ஷன் தொகை மாறும். எனினும் நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தத்தகவல் தற்போதைய சந்தை கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online