Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாதவிடாய் நாட்களில் இந்த 3 பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

மாதவிடாய் நாட்களில் இந்த 3 பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Kalki Online 2 weeks ago

லக மாதவிடாய் சுகாதார தினம். பெண்களின் சுகாதாரம், ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மாதவிடாய் பாதுகாப்பான சுகாதார முறைகளைப் பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்தவும், மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் வகையில் மே மாதம் 28-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வு மற்றும் வயிற்றுவலியைத் தவிர்க்க இரும்புச்சத்து, மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நிறைய தண்ணீர் நிறைந்த பானங்களை எடுத்துக் கொள்வது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் மற்ற அறிகுறிகளை தடுக்கவும் எளிதான வழிகளில் ஒன்றாகும்.

மாதவிடாய் காலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் 2 அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம் .பழங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். இந்த நேரத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை சீர்படுத்தவும் உதவும்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்:

இரத்த இழப்பால் ஏற்படும் சோர்வை தடுக்க கீரை வகைகள், பசலை கீரை, இலை காய்கறிகள், முட்டை மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்க்கலாம்.

இரும்புச்சத்து இரத்த போக்கினால் இழந்ததை ஈடு செய்து சோர்வை எதிர்த்து போராடுகிறது.

பழங்கள்:

வைட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி, பப்பாளி, அன்னாசிப் பழங்களை சாப்பிடலாம். பெர்ரி பழங்கள் அழற்சியை எதிர்த்துப் போராடும்.

மீன், நட்ஸ் வகைகள்:

சாலமன் மீன்கள், ஆளிவிதை, அக்ரூட் பருப்புகளில் ஒமேகா-3 உள்ளதால் மாதவிடாய், வலி, தசை பிடிப்புகளை குறைக்க உதவும்.

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நிலையான மனநிலையை தருகிறது.

வாழைப்பழம் சாப்பிட்டால் இயற்கையான சர்க்கரைகள் மூலம் உடனடி ஆற்றலை வழங்கும். இதில் பொட்டாசியம், பி6, மெக்னீசியம் உள்ளதால் சோர்வை தடுத்து நல்ல மனநிலையை அளிக்கிறது.

கால்சியம் நிறைந்த உணவுகள்:

பால், தயிர், ப்ரோக்கோலி ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகள் தசைப்பிடிப்புகளைக் குறைக்க மிகவும் உதவுகிறது.

இஞ்சி, தண்ணீர்:

இஞ்சி டீ குடிப்பதால் வயிற்றுவலியை சரி செய்யும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள், செரோடின், மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, மாங்கனீசு வலி, எரிச்சலைக் குறைத்து ஆற்றல் இழப்புகள் வராமல் தடுக்கிறது.

கெமோமில் தேநீர் குடிப்பதால் பதட்டத்தை குறைத்து மன அமைதியை கொடுக்கும்

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளில் தசைப்பிடிப்பை மோசமாக்கும்.

இரத்த சர்த்தரை அளவு மனநிலை மாற்றங்களை அதிகப்படுத்துகின்றன. அதனால் அதிக சர்க்கரை உள்ள உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும்.

வறுத்த, கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் வயிறு உப்புசம், செரிமானமின்மை, மந்த தன்மை ஆகியவை ஏற்படும்.

மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் எந்த உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சுழற்சி முழுவதும் உடல் ஊட்டச்சத்துக்களை பெற்று உடல் நன்கு கட்டுப்பாடாக இருக்கும்.

மகப்பேறு, பெண்கள் நலன் டாக்டர். கவிதா அவர்கள் கூறியது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online