Dailyhunt
நட்பிலும் உண்டு ஆபத்து!

நட்பிலும் உண்டு ஆபத்து!

Kalki Online 9 months ago

ரு நாள் ஒரு ஆடு புல் மேய்ந்து விட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பி கொண்டிருந்தது. அப்போது வழியில் இருந்த ஆற்றங்கரையில் ஒரு சிங்கம் காலில் அடிபட்டு படுத்திருந்தது.

இந்த ஆட்டிற்கோ பயமாக இருந்தது, பக்கத்தில் போனால் சாப்பிட்டு விடுமோ என்று... அதே சமயம் பார்ப்பதற்கும் பாவமாக இருந்தது. ஆகவே என்ன ஆனாலும் பரவாயில்லை, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்து அதனருகில் சென்றது.

"சிங்க அரசரே, என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று ஆடு கேட்டது.

"முதலையை வேட்டையாட ஆற்றிற்குள் போன போது முதலை என் காலை பிடித்து கொண்டு விடவில்லை, எப்படியோ நீந்தி கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தேன், முதலை ஜோராக கடித்து விட்டதால் நடக்க முடியவில்லை" என்றது சிங்கம்.

"அப்படியா... ஒரு நிமிஷம் இருங்கள்" என்று கூறி விட்டு அருகிலிருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஆற்றிலிருந்து தண்ணீரை நிரப்பி சிங்கத்திற்கு கொடுத்தது ஆடு.

பின், சிங்கத்தை மெதுவாக நடக்க வைத்து தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது. அன்று இரவு எங்கிருந்தோ ஒரு சில மாமிசத் துண்டுகளை கொண்டு வந்து சிங்கத்தின் பசியை ஆற்றியது. சிங்க ராஜாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

"யாருமே எனக்கு உதவி செய்ய வரவில்லை. என் தோற்றத்தையும் கர்ஜனையையும் பார்த்துவிட்டு அனைத்து விலங்குகளும் ஓடிப் போய்விட்டன. ஆனால், நீயோ இத்தனை பெரிய உதவி புரிந்திருக்கிறாய். நான் இதை எப்போதும் மறக்க மாட்டேன்," என்றது சிங்க ராஜா.

"என்ன ராஜா, இப்படி வருந்துகிறீர்கள்? நான் ஒரு சாதாரண ஆடு; உங்கள் சக்திக்கும் தோரணைக்கும் எதிரில் நான் வெறும் பூச்சியம்," என்று பெருந்தன்மையாக ஆடு பதிலளித்தது.

"Sorry Ayyappa"

பிறகு, ஆடும் சிங்கமும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டன.

மறுநாள், சிங்கம் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய காட்டிற்குப் போய்விட்டது. ஆனால், ஆட்டைப் பார்க்க அடிக்கடி அதன் இருப்பிடத்திற்கு வந்து போனது சிங்கம்.

இந்த ஆட்டிற்கு ஒரு குட்டியும் இருந்தது. சிங்கம் எப்போது அந்தக் குட்டியைப் பார்த்ததோ, அன்று முதல் அதன் பார்வை குட்டியின் மீதே இருந்தது. அந்தக் குட்டி பார்ப்பதற்கு அழகாகவும், மென்மையாகவும், கொழுகொழுவெனவும் இருந்தது. அதைச் சாப்பிட சிங்கத்திற்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது.

ஆனாலும், தாய் ஆட்டைப் பார்த்தவுடன், தன் உயிரைக் காப்பாற்றிய அந்த ஆட்டின் குட்டியை எப்படிச் சாப்பிடுவது என்று சிங்கத்திற்குத் தோன்றும். ஆகவே, தன் ஆசையை மனதிற்குள் கட்டுப்படுத்திக்கொண்டு சென்றுவிடும்.

ஒரு நாள், ராஜாவின் ஆசைக்கான கதவு திறக்கப்பட்டது. ஆம்! அன்று எப்போதும்போல சிங்கம் ஆட்டைப் பார்க்க வந்தது. எத்தனை குரல் கொடுத்தும் ஆடு வெளியே வரவில்லை. புல்வெளிக்குள் சென்று பார்த்தது. புல்லை மேய்ந்துகொண்டு "மே.. மே.. மே.." என்று குட்டி ஆடு கத்திக்கொண்டிருந்தது. பெரிய ஆடு அங்கில்லை என்று தெரிய வந்தது.

சிங்க மகாராஜாவுக்கு அப்போது தன் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாய்ந்து அந்தக் குட்டி ஆட்டை மேய்ந்துவிட்டது.

பட்டய கிளப்பும் பறவைகளின் ராஜா!

நாக்கை நக்கிக்கொண்டு தன் ஆசையை பூர்த்தி செய்துகொண்டது. பிறகு, வேகவேகமாக ஓடித் தன் இருப்பிடத்திற்கு வந்து எதுவும் தெரியாததுபோல் படுத்துக்கொண்டது.

சிறிது நேரம் கழித்து, பெரிய ஆடு அழுதுகொண்டே வந்தது.

"ஏய், நண்பா, என்ன ஆயிற்று?" என்றது சிங்கம்.

"சிங்க ராஜா, யாரோ என் குட்டியை மேய்ந்துட்டாங்க..." என்றது ஆடு.

"ஐயோ! அடப் பாவமே! ஏன் நண்பா, நீ வெளியில் போகும்போது என்னிடம் விட்டுச் சென்றிருக்கக் கூடாதா?" என்றார் நம் சிங்க ராஜா.

"ஆமாம் அரசரே! இங்கேயே விட்டுச் சென்றிருந்தால் உங்களுக்கு சிரமமில்லாமல் இருந்திருக்கும். இங்கேயே பொறுமையாக மேய்ந்திருப்பீர்கள் இல்லையா?" என்று கேட்டது ஆடு.

"என்ன உளறுகிறாய், நண்பா?" என்றது சிங்கம்.

"அரசரே! நீங்கள் சக்தி வாய்ந்தவர், நான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாமல் தான் தூரத்திலிருந்து என் குட்டியை நீங்கள் கடித்து உண்பதைப் பார்த்தேன். என் குட்டி கதறக் கதற கத்தியது என் காதில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் என் தவறு தான்; உங்களுடைய புத்தியையும் சக்தியையும் தெரிந்து நான் உங்களைக் காப்பாற்றி, உதவி புரிந்து, உங்களோடு நட்பு வைத்துக்கொண்டேனே! அதற்கு இது தேவை தான். நான் செய்த உதவிக்கு நீங்கள் செய்த இந்த கைம்மாறுக்கு மிக்க நன்றி," என்று கூறிவிட்டு ஆடு கண்ணீரோடு திரும்பிச் சென்றுவிட்டது.

சிங்கம் செய்வதறியாமல் திகைத்துப் போய், வாயடைத்து, ஒன்றும் பேச முடியாமல் ஆடு திரும்பிப் போவதையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தது.

இந்தக் கதை மூலம் நீங்கள் மூன்று நீதிகளைத் தெரிந்துகொள்ளலாம்:

  1. நமக்கு ஆபத்துக் காலத்தில் உதவி புரிந்தவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கவும் கூடாது, தீங்கு நினைக்கவும் கூடாது.

  2. உதவி புரிதல் நல்லது தான், அவசியமானதும் கூட. ஆனால், உதவி புரியும்போது யாருக்குச் செய்கிறீர்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து செய்ய வேண்டும். மேலும், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

  3. ஆசையை அடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்'.

குழந்தைகளே, இந்த மூன்று நீதிகளைக் கடைப்பிடித்து ஒழுக்கமான வாழ்க்கையை வாழுங்கள்!

சிறுவர் சிறுகதை: கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கோழி... ஒரு குறிக்கோள் ஒரு வெற்றி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online