Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.5,000 சரிவு.! தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி.!

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.5,000 சரிவு.! தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி.!

Kalki Online 2 weeks ago

ங்கத்தின் விலை கடந்த வாரத்தில் திடீர் உயர்வை சந்தித்த நிலையில், இந்த வாரம் சரிவை நோக்கி பயணித்து வருகிறது.

நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை சரிந்த நிலையில், வெள்ளி விலை மாற்றிமில்லாமல் விற்பனையானது.

கடந்த வாரத்தில் மட்டும் ரூ.6,000-க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களில் ரூ.2,400 வரை சரிந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை சரிந்தாலும், உயர்ந்தாலும் தொடர் முதலீடு செய்வது லாபத்தைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேற்று (ஜூலை 07) தங்கம் ஒரு சவரன் ரூ.1,280 சரிந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,07,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,400-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 08) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, ரூ.1,06,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்குப் பின், சாமானிய மக்கள் நகை வாங்குவதைக் குறைத்துள்ளனர். இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைக் காட்டிலும், தங்கத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்களும் கருதுவதால், முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 Gold Priceமுதல்வரை தடுக்கும் திமுக.. அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு.!

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 07: 1 கிராம் - ரூ.13,400 1 சவரன் ரூ.1,07,200

ஜூலை 06: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

ஜூலை 05: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 04: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 03: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 07: 1 கிராம் - ரூ.250

ஜூலை 06: 1 கிராம் - ரூ.250

ஜூலை 05: 1 கிராம் - ரூ.260

ஜூலை 04: 1 கிராம் - ரூ.260

ஜூலை 03: 1 கிராம் - ரூ.260

கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 8-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும், 1 கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

2025 ஜூலை 8-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்

மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் பேராபத்து.! அலட்சியம் காட்டினால் கண்களை இழக்க நேரிடும்!Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online