Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்!' - செஃப் தாமு வீடியோ மூலம் உருக்கமான விளக்கம்!

'நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்!' - செஃப் தாமு வீடியோ மூலம் உருக்கமான விளக்கம்!

Kalki Online 1 week ago

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமு, விஜய் டிவியின் சுவாரசியமான சமையல் கலை நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் 'சீசன் 7' அரை இறுதிப் போட்டியில் (Semi-finals) அவர் பங்கேற்காததால், அவர் கடுமையான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் சில தவறான தகவல்கள் பரவி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இவ்வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செஃப் தாமு வீடியோ மூலம் நேரடி தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் சற்றே களைப்பாக தெரியும் அவர் தான் நலமாக இருப்பதாகவும், காலில் ஊசி போட்டிருப்பதால் ஏற்பட்ட வலி காரணமாக அரை இறுதி போட்டி (Semi-finals) பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி குக் வித் கோமாளியின் சீசன் 7 இறுதிப்போட்டியில் தான் பங்கேற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, "செஃப் தாமு இறந்துவிட்டார்" என்ற தகவல் தவறான வதந்தி என அவரது ரசிகர்கள் வட்டாரம் ஆறுதல் அடைந்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞரான செஃப் தாமு, ஆரம்பக் காலத்தில் உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கி, தன் கடின உழைப்பால் பத்மஸ்ரீ விருது மற்றும் கின்னஸ் சாதனை வரை உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய சூழல் நிலவியது. அதை அடிப்படையாகக் கொண்டே தற்போது இத்தகைய தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. செஃப் தாமுவின் இந்த நேரடி விளக்கத்தைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞரான செஃப் தாமு, ஆரம்பக் காலத்தில் உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கி, தன் கடின உழைப்பால் பத்மஸ்ரீ விருது மற்றும் கின்னஸ் சாதனை வரை உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய சூழல் நிலவியது. அதை அடிப்படையாகக் கொண்டே தற்போது இத்தகைய தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. செஃப் தாமுவின் இந்த நேரடி விளக்கத்தைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' சமையல்-பொழுதுபோக்கு நிகழ்ச்சி, குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு சமையல் ரெசிபிகளை செய்வதும் அவர்களுக்கு உதவும் கோமாளிகள் செய்யும் அலப்பறைகளும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நடுவர்களும் காரணம் எனலாம். போட்டியாளர்களுக்கு ஈடு தந்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஷோ முழுவதும் வலம் வரும் நடுவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் உண்டு.

சமையல் போட்டியுடன் நகைச்சுவை, கலகலப்பான சவால்கள், நட்பு மற்றும் போட்டி ஆகியவை கலந்து இருக்கும். இதில் துவக்கம் முதல் நடுவராக இருக்கும் செஃப் தாமு இயற்கையாகவே நகைச்சுவை குணம் கொண்டவர் என்பதால் இதில் அவர் பேசுவதும் அவரது செய்கைகளும் அனைவராலும் கவனிக்கப் பட்டபட்டன.

அவரது அதிகாரப்பூர்வ Instagram கணக்கிலும் அவர் தன்னை Celebrity Chef, Guinness record holder, 26 சமையல் புத்தகங்களின் ஆசிரியர், Cooku With Comali Seasons 1-3 நடுவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் .2026 ஆகஸ்டில் வந்த குக் வித் கோமாளி சீசன் 7 செமி-ஃபைனல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததால் சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை பற்றியும் குறிப்பாக உயிரிழந்திருக்கலாம் என்பது போன்ற தவறான வதந்திகள் பரவின

தற்போதைய இணையதள உலகில் ஒருவரைப் பற்றி முழுவதும் அறியாமலேயே தவறான தகவல்களை தருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எதை வேண்டுமானாலும் எழுதலாம் எனும் நிலையே உள்ளது. இந்த வரிசையில் தற்போது செஃப் தாமுவின் வதந்நியும் இணைகிறது அவ்வளவே.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online