Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நீர் நாய்கள் பற்றிய சில தகவல்கள்!

நீர் நாய்கள் பற்றிய சில தகவல்கள்!

Kalki Online 1 year ago
 Otter

நீர்நாய்கள் கடல், ஆறுகள், நதிகளில் போன்றவற்றில் வசிக்க கூடியவை.

 Otter

இவைகள் கூட்டமாக செல்லும். தனியாகவும் வேட்டை ஆடும்.

கூட்டமாக செல்லும் இவை எந்த வகை மிருகங்களையும் தாக்க கூடியவை. கூரிய பற்களால் கடித்து விலங்குகளை திக்கு முக்காடவும் திணறடிக்கவும் செய்யும்.

 Otter

13 வகையான நீர் நாய்கள் உள்ளன. மீன்கள் அதிகம் சாப்பிடும். அது தவிர இவை உண்பவை நண்டுகள், தவளைகள் , பறவைகள், பூச்சிகள் ஆகியவை.

 Otter

இவை ஒரு வகை பாலூட்டி விலங்குகள். மெலிந்த நீண்ட உடல் வாகு கொண்டவை. நீரில் நீந்தவும், செல்வதற்கு தோதாக பாதங்களில் ஜவ்வுகளும், கூர்மை மிக்க நகங்களும் உள்ளன.

 Otter

ஒவ்வொரு வகையை பொறுத்து நீளம், எடை வேறுபடும். 2 முதல் 6 அடி நீளமும் , 1 முதல் 45 கிலோ அளவு எடை மாறுபடும்.

 Otter

60 முதல் 87 நாட்கள் கருவுற்றிருக்கும். புதிய குட்டிகளை தாய், தந்தை முன்பு வளர்ந்த குட்டிகள் கவனித்து கொள்கின்றன.

 Otter

ஒரு மாதம் ஆற்றின் கரையில் இருக்கும். பொந்தில் உள்ள குட்டிகள், 2 மாதங்களுக்கு பிறகு நீந்த தொடங்குகின்றன.

 Otter

சுமார் 1 வருட காலம் குடும்பத்துடன் வசிக்கும்.

 Otter

நீர் நாய்கள் 16 வருடங்கள் உயிர் வாழும்.

 Otter

ஒரு காலத்தில் காவிரி ஆற்றில் பல நீர் நாய்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.

 Otter

சங்க காலத்தில் வாழ்ந்த நீர் நாய்கள் சமவெளிப் பகுதிகளில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றன.

 Otter

குளிர் மலைக் குன்றுகளிலும் தென் இந்தியாவில் நீர் நாய்கள் காணப்பட்டன. நகமற்ற நீர் நாய்களும் வசித்தன.

 Otter

நீர் நாய்களின் தோல்களுக்காக பல இடங்களில் இவை வேட்டையாடப்படுவதால். இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

 Otter

இவை சுரு சுரு மிக்கவை. விளையாட்டு தன்மையும், கூச்ச சுபாவமும் கொண்டவை.

 Otter

பங்களாதேசத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இவற்றைப் பிடித்து பழக்கி, மீன்கள் பிடிக்க உதவுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

 Otter

சில மிருக காட்சி சாலைகளிலும் நீர் நாய்கள் வளர்க்கப் படுகின்றன. பொது மக்களும் பார்த்து மகிழலாம்.

 Home tipsஅவசியமான சில வீட்டுக் குறிப்புகள்... அம்புட்டும் அட்சர லக்ஷம் பெறும்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online