Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நிலவு முதல் செவ்வாய் வரை... விண்வெளி ஆய்வில் இந்தியாவின் விஸ்வரூபம்!

நிலவு முதல் செவ்வாய் வரை... விண்வெளி ஆய்வில் இந்தியாவின் விஸ்வரூபம்!

Kalki Online 6 months ago

விண்வெளி அறிவியல் (Space Science) என்பது பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள பிரபஞ்சம், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களைப் பற்றி ஆய்வு செய்யும் துறையாகும்.

இது வானியல், வானியற்பியல், கிரக அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இஸ்ரோ(ISRO) போன்ற அமைப்புகள் சந்திரயான், மங்கள்யான் மற்றும் ஆதித்யா-எல்1 போன்ற திட்டங்கள் மூலம் சூரியன் மற்றும் கிரகங்களை ஆய்வு செய்கின்றன.

விண்வெளி அறிவியலின் முக்கிய அம்சங்கள்:

*பிரிவுகள்:

வானியல்(Astronomy), வானியற்பியல் (Astrophysics), கோள் அறிவியல்(Planetary Science) மற்றும் விண்வெளி உயிரியல் (Space Biology) போன்ற பிரிவுகள் உள்ளன.

*ஆய்வு முறைகள்:

தொலைநோக்கிகள், செயற்கைக்கோள்கள், ஆளில்லா விண்வெளி ஆய்வுக் கருவிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்கள்.

*இந்தியாவின் பங்கு(ISRO):

சவுண்டிங் ராக்கெட்டுகள் மூலம் தொடங்கி, தற்போது சந்திரயான்(நிலவு), மங்கள்யான்(செவ்வாய்) மற்றும் ஆதித்யா-எல்1(சூரியன்) ஆகிய அறிவியல் பயணங்களை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

விண்வெளி அறிவியலின் முக்கிய சாதனைகள்:

விண்வெளி அறிவியல் மனிதகுலத்தின் அறிவை வியத்தகு முறையில் விரிவுபடுத்தியுள்ளது. நிலவில் கால் தடம் பதித்தல், செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்புதல், ஹப்பிள் (Hubble ) மற்றும் ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கிகள் மூலம் பிரபஞ்சத்தின் ஆழத்தை ஆராய்தல் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS) அமைத்தல் ஆகியவை மிக முக்கிய மைல்கற்களாகும்.

சடங்கல்ல அறிவியல்: தமிழ் மாதப் பிறப்புகளின் பின்னே இருக்கும் வானியல் ரகசியம்!

* விண்வெளி நிலையங்கள்:

சர்வதேச விண்வெளி நிலையம்(ISS) விண்வெளியில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் தொடர் ஆராய்ச்சி, சாத்தியமான மனித வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* ஆழ் விண்வெளி தொலைநோக்கிகள்:

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிகள் பிரபஞ்சத்தின் ஆழமான காட்சிகளை படம்பிடித்து, விண்மீன் திரள்களின் தோற்றத்தை விளக்குகின்றன. இது பிரபஞ்சத்தின் தோற்றம், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் கருந்துளைகளைப் பற்றிய புதிய பார்வையை வழங்குகின்றன.

* செவ்வாய் மற்றும் பிற கோள் ஆய்வுகள்:

நாசாவின் ரோவர்கள் செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் சூழலை ஆராய்ந்து வருகின்றன.

* இந்தியாவின் சாதனைகள்:

சந்திரயான்-1:

நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை முதன்முதலில் உறுதி செய்தது.

சந்திரயான்-3:

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றது.

மங்கள்யான்:

செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு மற்றும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ராக்கெட் தொழில்நுட்பம்:

PSLV, GSLV மற்றும் LVM3 போன்ற உள்நாட்டு ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவது.

* ஜிபிஎஸ்(GPS), வானிலை கணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கு உதவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தினசரி வாழ்வில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது.

* விண்வெளி ஆய்வுகளுக்காக உருவாக்கப்படும் புதிய பொருட்கள் விமான போக்குவரத்து, மருத்துவம் மற்றும் பிற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கிளட்ச் & பிரேக்: 90% டிரைவர்கள் செய்யும் 'அந்த' சின்ன தப்பு என்ன?

* இந்த சாதனைகள் விண்வெளி பற்றிய புரிதலை மேம்படுத்துவதுடன், பூமியில் தகவல் தொடர்பு, காலநிலை ஆய்வு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை மனிதனின் தொழில் நுட்பத்திறனை உலகிற்கு பறைசாற்றுவதுடன், எதிர்காலத்தில் பிற கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online