Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நிம்மதியான வாழ்க்கைக்கான ஜப்பானிய 'ஓபைடோரி' ரகசியம்!

நிம்மதியான வாழ்க்கைக்கான ஜப்பானிய 'ஓபைடோரி' ரகசியம்!

Kalki Online 6 months ago

வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஜப்பானிய தத்துவமான ஓபைடோரி (Oubaitori) பெரிதும் உதவுகிறது.

அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

ஓபைடோரி என்றால் என்ன?

ஓபைடோரி என்பது ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். இதன் அடிப்படைப் பொருள், 'ஒருபோதும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்' என்பதாகும். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனிப்பட்ட அழகு மற்றும் திறமைகள் உள்ளன. பிறருடன் உங்களை ஒப்பிடும்போது, அது தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்று இந்தத் தத்துவம் வலியுறுத்துகிறது.

மரக்கதவு வீணாகுதுன்னு கவலையா? இந்த ஆயிலைத் தடவினா 10 வருஷத்துக்கு கோரண்டீ!

மரங்களின் தத்துவம்: Oubaitori என்ற ஜப்பானிய வார்த்தை, வசந்த காலத்தில் பூக்கும் நான்கு மரங்களுக்கான எழுத்துக்களைக் குறிக்கிறது.Ou: செர்ரி, Bai: பிளம்ஸ், Tou: பீச், Ri: ஆப்ரிகாட்.இந்தக் கருத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், இந்த நான்கு மரங்களும் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்தப் பழத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், இந்த நான்கு மரங்களும் அதன் தனித்துவமான வழியில், குறிப்பிட்ட நேரத்தில் பூக்கின்றன, காய்க்கின்றன. செர்ரி மற்றும் பிளம் மரத்தைப் போல விரைவாகப் பூக்க முயற்சிப்பதில்லை. பீச், ஆப்ரிகாட் மரத்தைக் கண்டு பொறாமைப்படுவதில்லை. அவை அனைத்தும் தங்கள் சொந்த, தனிப்பட்ட, இயற்கையான பாதையைப் பின்பற்றுகின்றன. இந்தத் தத்துவத்தை நம் சொந்த வாழ்க்கைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஓபைடோரி வலியுறுத்துகிறது.

ஓபைடோரியின் மூன்று முக்கியக் கோட்பாடுகள்:

1. தனித்துவமான பாதை (தன்னுடைய பயணம்): ஒவ்வொருவருக்கும் தனக்கென்று ஒரு தனித்துவமான பயணம், திறமைகள் மற்றும் சிறப்புகள் உள்ளன. தன்னுடைய வளர்ச்சியை வேறொருவருடன் ஒப்பிடுவது, ஒரு செர்ரி மரம் தன்னை ஒரு பீச் மரத்துடன் ஒப்பிடுவதற்கு ஒப்பாகும். இது முற்றிலும் தேவையில்லாதது.

வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் ரகசியங்கள்!

2. தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம்: நமது கவனம், மற்றவர்களை விட சிறந்தவராக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்வதை விட, தன்னுடைய வளர்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, நாம் நம்முடைய சிறந்த பதிப்பாக மாற வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டும்.

3. சரியான நேரமும் காலமும்: வெற்றி, சாதனை அல்லது மகிழ்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட வயதோ அல்லது காலவரையறையோ இல்லை. எந்த வயதிலும் பிடித்ததைச் செய்யலாம், வெற்றியடையலாம். பூக்கள் தனக்கான பருவத்தில் பூப்பது போல, நாமும் நமக்கான நேரத்தில் சிறந்தவராக விளங்கலாம்.

நடைமுறை உதாரணங்கள்:

தொழில் ஒப்பீடு: உங்களுடைய நண்பருக்கு 30 வயதாகிறது. அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகி, ஆடம்பரமான வீடு வாங்கிவிட்டார் என்ற நிலையில், அவரை உங்களுடன் ஒப்பிட்டு, 'நான் இத்தனை பெரிய பதவியில் இல்லையே, நண்பன் வாங்கும் சம்பளம் நான் வாங்கவில்லையே, எனக்குச் சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவதும், பொறாமைப்படுவதும் தேவையற்றது.

பள்ளி விட்டு வந்ததும் உங்கள் குழந்தையை பேச வைக்கும் 7 அறிவார்ந்த கேள்விகள்!

உங்கள் இலக்குகள் வேறு, உங்கள் பாதை வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகப் பதிவுகளில் பிறருடைய 'அழகான' வாழ்க்கையைப் பார்த்து, தான் எதற்கும் தகுதி இல்லை என்று உணர்வதும் சிறுபிள்ளைத்தனம்.

ஓபைடோரி தத்துவத்தைப் பயன்படுத்தி, தன்னுடைய தனித்தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே நேசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை ஒரு தலைசிறந்த படைப்பு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காணும் முன்னேற்றம் உங்களால் மட்டுமே நிகழும். எனவே, பிறருடன் அதை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருடைய வளர்ச்சி என்பது அவருடைய முயற்சியிலும் செயலிலும் மட்டுமே ஏற்படுமே தவிர, பிறரின் தலையீட்டிலும் அல்லது ஒப்பீட்டிலும் வளராது என்று புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online