Dailyhunt
ஊமத்தை: விஞ்ஞானம் அறியாத மருத்துவ ரகசியங்கள்!

ஊமத்தை: விஞ்ஞானம் அறியாத மருத்துவ ரகசியங்கள்!

Kalki Online 5 months ago

மத்தை - இது வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை என்று மூன்று வகைப்படும். பொதுவாக நோய் தணிப்பானாகவும், இசிவு நோய் தணிப்பானாகவும், அறுவை சிகிச்சைக்கும், மகப்பேருக்கும், மயக்க மருந்தாகவும் இது பயன்படுகிறது.

இதன் மருத்துவ பயன்கள் ஏராளம்.

இதன் இலையை நல்லெண்ணையில் வதக்கிக் கட்ட வாத வீக்கம் மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல் ஆகியவை குணமடையும்.

இதன் இலைச் சாறுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் 2 துளிவிட காது வலி நீங்கும்.

இலையை நீர்விடாது அரைத்து நல்லெண்ணையில் வதக்கி நாய்க்கடி புண்ணில் கட்ட புண் ஆறும். இதன் இலைச்சாற்றை சம அளவு தேங்காய் எண்ணையில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாக பயன்படுத்த, சதை வளரும் புண்கள் தீரும்.

இலை, பூ, காய் மூன்றையும் அவித்து உலர்த்தி தூள் சேர்த்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குறையும்.‌ ஊமத்தையை தாமரைக் கிழங்கோடு அரைத்து பாலில் சேர்த்து மூன்று நாள் கொடுக்க பில்லி சூன்யம் நீங்கும்.

ஊமத்தையை இரவில் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை தலைக்குத் தேய்த்து குளிக்கவும். ஏழுநாள் இப்படிச் செய்ய சித்த பிரம்மை நீங்கும்.

ஊமத்தை இலைச்சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 500 மில்லி, மயில் துத்தம் 50 மில்லி போட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி இதை மேகப்புண், நீரிலும் ஆராத புண்கள் மீது தடவ அவை குணமடையும்.

ஊமத்தை இலை சாற்றை சூடாக்கி தலையில் தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.

இதன் இலையுடன் அரிசிமாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து அதைக் களி போல் கிளறி இதமான சூட்டில் பற்றுப்போட மூட்டு வீக்கம் கட்டிகள் குணமாகும்.

ஊமத்தை (Datura medicine) விதை 50 கிராம் ஒன்றிரண்டாக இடித்து 400 மில்லி நல்லெண்ணையில் இட்டு 7 நாட்கள் கழித்து அரைத்து வெயிலில் காயவைத்து அதை அடிவயிற்றில் தடவ சூதக வயிற்றுவலி, நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்.

இதன் வேர் மற்றும் விதை வயிற்றுப் போக்கை தடுக்கிறது. நோய் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது‌. சரும வியாதிகளைக் போக்குகிறது. சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.

அட்ரோபின் என்ற ஆங்கில மருந்துக்கு ஈடானது. தற்கொலைக்கு விஷம் சாப்பிட்டவர்கள் உயிரை இந்த அட்ரோபின் காப்பாற்றுகிறது‌. இந்த ஊமத்தை ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

உடல் எடைக் குறைப்பு சீக்ரெட்ஸ் இந்த 5 விஷயங்களைச் செய்தால்… ஜிம் எதற்கு?

விஷக் காய்ச்சலுக்கு இதன் இலைகளையும், காய்களையும் பறித்து 12 மணி நேரம் தண்ணீரிலும், 12 மணி நேரம் எலுமிச்சை சாற்றிலும் ஊறவைத்து பின்னர் காயவைத்து சூரணம் செய்து ஒரு கிராம் அளவில் தேனில் கலந்து மூன்று வேளை சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட விஷக்காய்ச்சல் உடனே நிற்கும்.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் அரை கிராம் அளவு மேற்கூறிய சூரணத்தை அரை கிராம் தேனில் கலந்து சாப்பிட உயிரணுக்கள் உற்பத்தி ஆகும்.

இந்த ஊமத்தையில் ஆன்மிக பயனும் உண்டு‌. முட்கள் கொண்ட இக்காயால் தீபம் ஏற்றி வழிபட, உங்கள் கஷ்டங்கள் அடியோடு நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு‌.

உடல் எடையைக் குறைக்க உதவும் 7 வகையான உயர் புரதக் காலை உணவுகள்!

மேலும் இந்த தீபம் தீய சக்தியை விரட்டுவதற்கான சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. சிவலிங்கத்திற்கு ஒரு ஊமத்தம்பூவை சாற்றி வழிபட ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online