Dailyhunt
ஓட்டு போட.. உங்க ஆபீஸ் லீவு தரவில்லையா.. புகார் அளிக்க இதோ ஃபோன் நம்பர்..!

ஓட்டு போட.. உங்க ஆபீஸ் லீவு தரவில்லையா.. புகார் அளிக்க இதோ ஃபோன் நம்பர்..!

Kalki Online 1 day ago

கேரளா மற்றும் புதுச்சேரிக்கு 9-ம்தேதியும்(இன்று), தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும், தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 23-ம்தேதி வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள், கடைகள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை கட்டாயமாகும்.

தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர்துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

#BREAKING: சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

சென்னை மண்டலத்திற்கு 1800-425-7012 என்ற கட்டணமில்லா எண்ணிலும், அந்தந்த மாவட்ட தொழிலாளர் துறை கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் அளிக்கலாம்.

அதன்படி மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அலுவல் மற்றும் உறுப்பினர்களான எல்.ரமேஷ் (சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்) / மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் - 7904646090

தொழிலாளர் உதவி ஆணையர் எல்.ஷோபனா முதல் வட்டம்(அமலாக்கம்) - 7299007334

தொழிலாளர் உதவி ஆணையர் பி.பழனி, 2-ம் வட்டம் (அமலாக்கம்) - 7904802429

தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் 3-ம் வட்டம் (அமலாக்கம்) - 9043555123.

திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் புகார் அளிக்க..

திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ரா.வேதநாயகி- 9884264814

தொழில் துறை ஆய்வாளர் சிவகுமார் - 8122764350

முத்திரை ஆய்வாளர் 2-ம் வட்டம் சாந்தி - 9952308664

திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு சட்டம்) வரதராஜன் - 9566168563

ஆம்பூர் முத்திரை ஆய்வாளர் சோனியா - 9786128502

திருப்பத்தூர் முத்திரை ஆய்வாளர் விஜயராஜ் - 8610471143

ராமநாதபுரம் : 9600183368, 9600713835, 9443497670.

திருப்பூர்: 94430 21877, 99442 58037, 99521 42578.

திருச்சி: 0431-2420235, 9865464256, 9688314216, 9489815304.

கரூர்: 04324-245499, 9688314216, 7010321669.

பெரம்பலூர் : 9442657224,9751921795, 9865667355.

அரியலூர்: 8778365530, 8838680747, 9790460408.

கோவை : 0422-2241136, 82206-13777, 95008-97708, 98433-71977.

- ஆகிய அந்தந்த மாவட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online