Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சமையல் குப்பையைத் தூக்கி எறியறீங்களா? இந்தத் தவறை இனி செய்யாதீங்க!

சமையல் குப்பையைத் தூக்கி எறியறீங்களா? இந்தத் தவறை இனி செய்யாதீங்க!

Kalki Online 3 weeks ago

வீட்டில் தினமும் தூக்கி எறியும் காய்கறி மற்றும் பழத் தோல்கள் வெறும் குப்பை அல்ல; அது உங்கள் செடிகளுக்கு உயிரூட்டும் பொக்கிஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதிகச் செலவோ பெரிய இடமோ இல்லாமல், எளிய முறையில் சமையல் கழிவுகளை மதிப்புமிக்க இயற்கை உரமாக மாற்றுவது எப்படி? சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, உங்கள் வீட்டுத் தோட்டத்தை பசுமையாக்குவதற்கான இந்த எளிய வழிமுறைகளைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

ஒவ்வொரு நாளும் நம் வீடுகளில் காய்கறித் தோல்கள், பழத்தோல்கள், காபித்தூள், தேயிலைத் தூள் போன்ற சமையல் கழிவுகள் குப்பைக்குச் செல்கின்றன. ஆனால், பலர் அறியாத ஒரு உண்மை என்னவென்றால், இந்தக் கழிவுகளே செடிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறந்த இயற்கை உரமாக மாறும். சிறிய பழக்க மாற்றம் மூலம் வீட்டுக் குப்பையைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு பசுமையையும் வளர்க்க முடியும்..

சமையல் கழிவுகள் பயன்பாடற்றவை என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், இவையே இயற்கை உரமாக மாறி செடிகளுக்கு உயிரூட்டும் பொக்கிஷமாக விளங்கும் என்பது பலருக்குத் தெரியாது. வீட்டிலேயே எளிய முறையில் சமையல் கழிவுகளை உரமாக மாற்றுவதன் மூலம் குப்பையைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

இதற்காக அதிகச் செலவோ, பெரிய இடமோ தேவையில்லை.

ஒரு வாளி அல்லது மூடியுள்ள தொட்டி இருந்தாலே போதும். அதில் காய்கறித் தோல்கள், பழத்தோல்கள், உதிர்ந்த இலைகள், காபித்தூள்,தேயிலைத் தூள் போன்ற மக்கும் கழிவுகளைப் போட்டு, அவற்றுடன் சிறிதளவு உலர்ந்த இலைகள் அல்லது தேங்காய் நார் சேர்த்து கலக்க வேண்டும். அவ்வப்போது கிளறி, ஈரப்பதத்தைச் சரியாக வைத்திருந்தால் சில வாரங்களில் சத்துக்கள் நிறைந்த இயற்கை உரம் கிடைக்கும்.

12 இன்ச் தொட்டி போதும்! கொத்து கொத்தாக எலுமிச்சை பறிக்க சூப்பர் ட்ரிக்!

இருப்பினும், எல்லா சமையல் கழிவுகளையும் இதில் சேர்க்கக் கூடாது. இறைச்சிக் கழிவுகள், மீன் எச்சங்கள், எண்ணெய் அதிகமுள்ள உணவுகள், பிளாஸ்டிக் அல்லது உலோகப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை துர்நாற்றம், பூச்சித் தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

இயற்கை உரத்தை வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், பூந்தொட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தும்போது மண்ணின் வளம் அதிகரிக்கும். ரசாயன உரங்களின் தேவையும் குறையும். செடிகள் ஆரோக்கியமாக வளர்வதுடன், பூக்களும் காய்கறிகளும் நல்ல விளைச்சலைத் தரும். மேலும், குப்பை மேடுகளுக்குச் செல்லும் மக்கும் கழிவுகளின் அளவும் குறைவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இது ஒரு சிறிய ஆனால் முக்கியமான பங்களிப்பாக அமைகிறது.

இன்று உலகம் முழுவதும் "கழிவைக் குறைப்போம், மறுபயன்பாட்டை அதிகரிப்போம்" என்ற விழிப்புணர்வு வலுப்பெற்று வருகிறது. அந்த மாற்றம் நம் வீட்டுச் சமையலறையிலிருந்தே தொடங்கலாம். தினமும் குப்பையாக வெளியேறும் சிறிய சமையல் கழிவுகள் நாளை பசுமையை வளர்க்கும் இயற்கை உரமாக மாறும். ஒவ்வொரு வீட்டிலும் இந்தப் பழக்கம் உருவானால், குப்பை குறையும்; மண் வளம் பெருகும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இன்று நாம் செய்யும் இந்தச் சிறிய முயற்சியே, நாளைய தலைமுறைக்கு பசுமையான பூமியைப் பரிசாக அளிக்கும் பெரிய சாதனையாக மாறலாம்.

 இயற்கை உரம் | Organic fertilizer

குப்பையை உரமாக எப்படி மாற்றுவது?

1. மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்:

வீட்டுக் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனப் பிரித்து சேதரிப்பது மிகவும் அவசியம்.. இதனால் உரம் தயாரிப்பது எளிதாகும்.. பிளாஸ்டிக், கண்ணாடி,,உலோகம் போன்றவற்றை உரத் தொட்டியில் சேர்க்கக் கூடாது..

2. மண்புழு உரம்:

மண்புழுக்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மண்புழு உரம் சாதாரண உரத்தை விட அதிக சத்துக்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது..இது மண்ணின் வளத்தையும் நீரைத் தக்க வைக்கும் திறனையும் மேம்படுத்துகிறது..

3. மீத்தேன் வாயு குறைப்பு:

உணவுக் கழிவுகளை குப்பைக் கிடங்கில் கொட்டும் போது மீத்தேன் என்ற பசுங்குடில் வாயு உருவாகிறது.. ஆனால் அவற்றை உரமாக மாற்றினால் இந்த வாயுவின் உற்பத்தி குறைந்து சுற்றுச்சூழலுக்கு நன்மை கிடைக்கும்..

4. நகர்ப்புறங்களில் பயன்பாடு:

இன்று பல அடுக்கு மாடி குடியிருப்புகள் வீட்டிலேயே உரம் தயாரிக்கும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன.. இதனால் குப்பை அகற்றும் செலவும் மிச்சமாகிறது.

வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக தண்டின் மூலம் புதினா வளர்ப்பது எப்படி?

பசுமையான எதிர்காலம் என்பது பெரிய திட்டங்களால் மட்டும் உருவாகாது; வீட்டில் நாம் கடைப்பிடிக்கும் சிறிய நல்ல பழக்கங்களிலிருந்தே அது தொடங்குகிறது. இன்று குப்பை என்று ஒதுக்கும் சமையல் கழிவுகள், நாளை மண்ணுக்கு உயிரூட்டும் இயற்கை உரமாக மாறும். இந்த எளிய மாற்றம் குப்பையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தையும் பாதுகாக்கிறது. இயற்கையை நேசிக்கும் எண்ணத்தை அடுத்த தலைமுறைக்கும் விதைக்கிறது.

பசுமையைப் பாதுகாப்பது பெரிய திட்டங்களால் மட்டும் அல்ல.. வீட்டில் தினமும் உருவாகும் சமையல் கழிவுகளைச் சரியாக பயன்படுத்துவதாலும் தொடங்கலாம்.. இன்று குப்பைத் தொட்டியில் விழும் ஒரு பழத் தோல் நாளை ஒரு செடிக்கு உயிர் தரும் உரமாக மாறலாம்.

"கழிவைக் குறைப்போம் இயற்கையை வளப்படுத்துவோம்" என்ற எண்ணம் ஒவ்வொரு வீட்டிலும் உருவானால் நம் சுற்றுச்சூழல் நிச்சயமாக இன்னும் பசுமையாக மாறும்..

இக்கட்டுரையை வாசிப்பதின் மூலம் நாம் தெரிந்து கொள்வது குப்பை என்பது வீணான பொருள் அல்ல.. சரியாகப் பயன்படுத்தினால் அது இயற்கைக்கான மதிப்பு மிக்க வளம்.. ஒவ்வொரு வீட்டிலும் உரம் தயாரிக்கும் பழக்கம் உருவானால் பசுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் பங்கெடுத்தவர்களாக இருப்போம்..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online