Dailyhunt
சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் நாவல் கொட்டை!

சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் நாவல் கொட்டை!

Kalki Online 1 year ago

லக அளவில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது சர்க்கரை வியாதி. அந்நோய் வராத வரை ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், அது வந்து விட்டால் பல பிரச்னைகள் அதன் பின்னாலே வந்துவிடும்.

அலோபதி மருத்துவத்தை விட இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் அருட்கொடை என இதைக் கூறலாம். நாவல் பழம், அந்தப் பழத்தை விட அதன் உள்ளே இருக்கும் விதைக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல விதமான உடல் உபாதைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. நாவல் பழக்கொட்டையில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நோய்க்கான சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் உணவு முறையிலும் கை வைத்தியத்திலும் பக்கவிளைவில்லாத பாதிப்பை உண்டாக்காத சிகிச்சையும் மேற்கொள்வது நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் நோயை கட்டுக்குள் கொண்டு வர நாவல் பழங்களும் அதன் கொட்டைகளும் நமக்கு அருமருந்தாய் பயன்படுகிறது.

இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்று மூன்று சுவைகளும் நிறைந்த சுவையான கனி நாவல் பழம். மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த நாவல் பழத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, எரிசத்து நிறைந்திருக்கிறது. நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டவை. நாவல் மரத்தின் அனைத்து பகுதிகளுமே இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின், தாமிரச் சத்துக்களை கொண்டவை.

உடலில் ஹீமோகுளோபின் சத்து குறைவாக இருக்க உடலில் இரும்புச்சத்து குறைபாடும் காரணம். இதை நிவர்த்தி செய்ய நாவல் உதவுகிறது. எலும்புகளுக்கு வலிமை கொடுக்கவும் நாவல் மரம் உதவுகிறது. நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு நாவல் எப்படி உதவுகிறது என்பதைப் பார்க்கலாம்.

நாவல் பழங்கள் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைடு ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழங்கள் மட்டுமல்லாது, அதன் கொட்டையும் அருமருந்தாகப் பயன்படுகிறது.

நாவல் பழங்களைக் காட்டிலும் அந்தக் கொட்டையை பதப்படுத்தி பவுடராக்கி சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் அதிகம் என்கிறது ஆய்வுகள். நாவல் பவுடரை தொடர்ந்து எடுத்துகொண்டவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும். சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்தது கண்டறியப்பட்டது.

நாவல் பழத்தின் கொட்டைகள் குறித்து அறிந்து பலரும் இதை பயன்படுத்தத் தொடங்கியதால் தற்போது நாட்டு மருந்து கடைகள் முதல் அனைத்து இடங்களிலும் இதன் கொட்டைகளும், பொடிகளும் விற்பனை செய்யப்படுகிறது. நாவல் பழத்தின் கொட்டைகளை வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் மைய பொடித்துக்கொள்வது எளிதானது.

நாவல் பழத்தை வாங்கி வந்து அந்த பழங்களை பிரித்துக் கொட்டைகளை தனியாக்குங்கள். கொட்டைகளை சதை போக கழுவி சுத்தமான துணியில் 5 நாட்கள் வரை உலர்த்தி எடுங்கள். பிறகு அதை இரண்டாக உடைத்து மீண்டும் வெயிலில் காய விடுங்கள். இப்போது அதன் உள்ளிருக்கும் பச்சை நிறமும் உலர்ந்திருக்கும் இப்போது கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரையுங்கள். இதேபோன்று அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் சலித்துப் பொடியாக்கியதும் கண்ணாடி பாட்டிலில் வைத்து காற்றுபுகாமல் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம். நாவல் கொட்டை பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு கட்டுக்கடங்காமல் இருக்கும்போது சிறுநீர் அதிகமாக வரும். கட்டுப்படுத்த முடியாத அளவு சிறுநீர் பெருக்கி இருக்கும்போது நாவல் கொட்டை பொடியை இருவேளையும் பாலில், வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்போக்கு குறையும்.

நீரிழிவை பிரச்னையை கட்டுப்படுத்தும் நாவல் பழமும் அதன் கொட்டைகளும் சாப்பிடுவதால் மூளை பலமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். சிறுநீரில் நச்சுக்களை வெளியேற்றும். சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் பிரச்னையை போக்கும். மலச்சிக்கல் நீங்கும். உடல் சோர்வு நீங்கும். இரத்த சோகை போக்கும். குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

நீரிழிவு பிரச்னையை மாத்திரைகளால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பவர்கள் நாவல் கொட்டை பொடியை சாப்பிடலாம். இது நீரிழிவால் உடல் உறுப்புகளுக்கு உண்டாகும் பாதிப்பை தடுப்பதோடு வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்காது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online