Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சரும நோய்களா? அறிகுறிகளை வைத்தே பாதிப்பை உணர்வது எப்படி?

சரும நோய்களா? அறிகுறிகளை வைத்தே பாதிப்பை உணர்வது எப்படி?

Kalki Online 2 months ago

லை முதல் பாதம் வரை தோன்றும் சரும நோய்கள்…. இதில் எதற்கு அதிக கவனம் அவசியம்? எது பரவலாம்? சரும நோய்களும், ஒவ்வாமைகளும் தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஆனால், அவற்றின் காரணங்கள் உடலின் பகுதியைப் பொறுத்து மாறுபடும். உச்சந்தலை, பாதங்கள், இடுப்புப் பகுதி போன்ற சில இடங்களில் ஏற்படும் தொற்றுகள் மிகவும் நீடித்தவையாகவும், எளிதில் பரவக்கூடியவையாகவும் அல்லது தீவிரமானவையாகவும் இருப்பதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

தலை, உச்சந்தலை (Scalp):

உச்சந்தலையில் டின்யா கேபிடிஸ் (tinea capitis), பொடுகு மற்றும் பேன் போன்ற பூஞ்சைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியர்வை, சுகாதாரமின்மை அல்லது சீப்புகள், தொப்பிகளைப் பகிர்ந்துக்கொள்வது போன்றவை இதற்கான காரணங்களாகும். இந்தத் தொற்றுகள் பள்ளிகளிலோ அல்லது வீடுகளிலோ எளிதில் பரவக்கூடும். உச்சந்தலைத் தொற்றுகள் முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும். எளிதில் பரவக்கூடியவை என்பதால்; இங்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

முகம் மற்றும் கழுத்து:

முகத்தில் முகப்பரு, சரும அழற்சி அல்லது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் (herpes simplex) போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படலாம். எண்ணெய் பசை சருமம், அழகு சாதனப் பொருட்கள் அல்லது மன அழுத்தம் ஆகியவை இதற்கான காரணங்களாகும். முகப்பரு எளிதில் பரவக்கூடியது அல்ல என்றாலும், ஹெர்பெஸ் புண்கள் நேரடித் தொடர்பு மூலம் பரவக்கூடும். முகத்தில் ஏற்படும் தொற்றுகள் தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் பாதிப்பதால் கவனம் செலுத்துவது முக்கியம்.

 Body skin care | சரும பாதுகாப்பு

மார்பு மற்றும் உடல்:

மார்பு மற்றும் முதுகில் பெரும்பாலும் பூஞ்சைத் தடிப்புகள் (டீனியா கார்போரிஸ் (Tinea corporis) அல்லது கொப்புளங்கள் போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. வியர்வை, இறுக்கமான ஆடைகள் அல்லது உராய்வு ஆகியவை இதற்கான காரணங்களாகும். இந்தத் தொற்றுகள் எளிதில் பரவக்கூடியவை அல்ல; ஆனால் பகிரப்பட்ட ஆடைகள் அல்லது துண்டுகள் மூலம் பரவக்கூடும்.

கைகள் மற்றும் மணிக்கட்டுகள்:

கைகளில் எக்ஸிமா (eczema), தொடு ஒவ்வாமை மற்றும் மருக்கள் ஏற்படுகின்றன. ரசாயனங்கள் அடங்கிய பொருட்களால் அடிக்கடி கை கழுவுவது அல்லது வைரஸ் தொற்று ஆகியவை இதற்கான காரணங்களாகும். இதில் மருக்கள், தொடுதல் மூலம் பரவக்கூடியவை. எனவே, கை சுகாதாரம் மிகவும் முக்கியமானது.

இடுப்பு மற்றும் அந்தரங்கப் பகுதிகள்:

இடுப்புப் பகுதியானது பூஞ்சைத் தொற்றுகள் (ஜாக் இட்ச் - jock itch), ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் பிற வைரஸ் நோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. ஈரப்பதம், இறுக்கமான ஆடைகள்தான் இதன் பொதுவான தூண்டுதல்களாகும். இந்தத் தொற்றுகள் எளிதில் பரவுவதாலும், அசௌகரியம் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 Foot care | சரும பாதுகாப்பு

கால்கள் மற்றும் பாதங்கள்:

பாதங்களில் பெரும்பாலும் பாதப் பூஞ்சை தொற்று, செல்லுலைட்டிஸ் (cellulitis) அல்லது பூஞ்சை நகம் தொற்றுகள் ஏற்படுகின்றன. ஈரமான காலணிகள், பொதுக் குளியலறைகள் பயன்படுத்துவது அல்லது வெட்டுக் காயங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகும். பாதப் பூஞ்சைத் தொற்றுகள் பரவக்கூடியவை. எனவே, சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் செல்லுலைட்டிஸ் தீவிரமடையக்கூடும். குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது ரத்த ஓட்டக் குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறப்புப் பராமரிப்பு தேவைப்படுகிறது.

மற்றவர்களுக்குப் பரவக்கூடியவை:

பூஞ்சைத் (Fungus) தொற்றுகள் (தலை, பாதங்கள், இடுப்புப் பகுதி), வைரஸ் தொற்றுகள் (ஹெர்பெஸ்(herpes), மருக்கள்), மற்றும் ஒட்டுண்ணித் தொற்றுகள் (பேன்கள், சிரங்கு) ஆகியவை நேரடித் தொடர்போ, பகிரப்பட்ட பொருட்களாலோ அல்லது மோசமான சுகாதாரம் ஆகியவற்றின் மூலம் பரவக்கூடும். இவற்றில் குழந்தைகளிடம் ஏற்படும் தலை (Scalp) தொற்றுகள், பெரியவர்களிடம் ஏற்படும் இடுப்புப் பகுதி தொற்றுகள், மற்றும் பொது இடங்களில் ஏற்படும் பாதத் தொற்றுகள் ஆகியவை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online