Dailyhunt
சத்தான மற்றும் ருசியான சுண்டல் ரெசிபிகள் செய்வோமா?

சத்தான மற்றும் ருசியான சுண்டல் ரெசிபிகள் செய்வோமா?

Kalki Online 1 year ago

பச்சை அவரை சுண்டல்:

பச்சை அவரை ஒரு கப்

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

சீரகம் 1/2ஸ்பூன்

தனியா பொடி 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

பெருங்காயத்தூள் சிறிது

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

பச்சை அவரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த அவரையை நீரை வடிகட்டி சேர்த்துக் கிளறவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து சுண்டலில் போட்டு தனியா பொடியையும் சேர்த்துக்கிளற சத்தான ருசியான பச்சை அவரை சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்:

கடலைப்பருப்பு ஒரு கப்

வெல்லம் அரை கப்

ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

சத்துக்கள் மிகுந்த சுவையான தட்டைப்பயறு சாதம் மற்றும் அத்திக்காய் வடை!

கடலைப்பருப்பை வாணலியில் சூடு வர வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குழையாமல் மலர வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை கரைத்து கல்மண் போக வடிகட்டி கொதிக்கவிடவும். வெல்லப்பாகு சிறிது கெட்டியானதும் அதில் வெந்த கடலைப்பருப்பை சேர்த்து ஏலப்பொடி, தேங்காய் துருவல் போட்டு கலந்து இறக்கவும். மிகவும் ருசியான கடலைப் பருப்பு, இனிப்பு சுண்டல் தயார்.

பட்டர் பீன்ஸ் சுண்டல்:

பட்டர் பீன்ஸ் உரித்தது ஒரு கப்

உப்பு தேவையானது

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

இஞ்சித் துருவல் ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள்

வேஸ்ட்டாக்க வேண்டாமே ப்ளீஸ்...

உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த பட்டர் பீன்ஸ், பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், அரைத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து கலந்துவிட மிகவும் ருசியான பட்டர் பீன்ஸ் சுண்டல் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online