Dailyhunt
சட்டுன்னு செய்ய கொத்தவரங்காய் துவையல் - வெள்ளை சட்னி ரெசிபிஸ்!

சட்டுன்னு செய்ய கொத்தவரங்காய் துவையல் - வெள்ளை சட்னி ரெசிபிஸ்!

Kalki Online 1 year ago

ன்றைக்கு சுவையான கொத்தவரங்காய் துவையல் மற்றும் வெள்ளை சட்னி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கொத்தவரங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.

வெங்காயம்-1

எண்ணெய்-2 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

புளி-நெல்லிக்காய் அளவு.

வரமிளகாய்-2

பச்சை மிளகாய்-1

தேங்காய்-1 கப்.

உப்பு-1 தேக்கரண்டி.

கொத்தவரங்காய்-15.

கொத்தமல்லி-சிறிதளவு.

கொத்தவரங்காய் துவையல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் நறுக்கிய வெங்காயம் 1 எண்ணெய் இல்லாமல் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துவிட்டு 1 தேக்கரண்டி உளுந்து சேர்த்து வறுத்துவிட்டு நெல்லிக்காய் அளவு புளி, வரமிளகாய் 2, பச்சை மிளகாய் 1, தேங்காய் 1 கப் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கடைசியாக 15 கொத்தவரங்காயை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது இதில் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது வதக்கி வைத்த வெங்காயம், வாசனைக்கு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான கொத்தவரங்காய் துவையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வெள்ளை சட்னி செய்ய தேவையான பொருட்கள்.

தேங்காய்-1 கப்.

பச்சை மிளகாய்-2

இஞ்சி-1 துண்டு.

பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

கல் உப்பு-1/2 தேக்கரண்டி.

தாளிக்க,

எண்ணெய்-சிறிதளவு.

கடுகு-1/2 கப்.

உளுந்து-1/2 கப்.

வரமிளகாய்-1

கருவேப்பிலை-சிறிதளவு.

சுவையான வெண்ணெய் புட்டு - மொறு மொறு பகோடா செய்யலாம் வாங்க!

வெள்ளை சட்னி செய்முறை விளக்கம்.

முதலில் 1 கப் தேங்காயை நறுக்கி எடுத்துக்கொண்டு அதை மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் 2 பச்சைமிளகாய், 1 துண்டு இஞ்சி, 1 தேக்கரண்டி பொட்டுக்கடலை, சீரகம்1/2 தேக்கரண்டி, கல் உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கெட்டி சட்னி பிடித்தால் அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் கொஞ்சாம் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு ½ தேக்கரண்டி, உளுந்து ½ தேக்கரண்டி, வரமிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்துக் கலந்துக்கொள்ளவும். சுவையான வெள்ளை சட்னி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online