Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!

சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!

Kalki Online 2 days ago

வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தும், தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரின் மனப்பாங்கு விரிவாக சித்தரிக்கப் படுகிறது.

விதிமுறைகளை மதித்து, நேர்மை, விசுவாசம், மனச்சாட்சி ஆகியவற்றை காக்கும் அவர், தீய சேர்க்கை, மூடநம்பிக்கை, வீண் பேச்சு ஆகியவற்றைத் தவிர்த்து, விமர்சனத்தைக் கவனித்தும் பயப்படாமல் முன்னேறுகிறார். சிறிய வெற்றியையும் விளம்பரப் படுத்தி, எதிர்காலத்துக்கான அடித்தளமாக்குகிறார்.

கடலைத்தாண்டிப் போனால்தான் கஷ்டம் தீரும் என்று தெரிந்தால் வீட்டிலேயே இருக்கிறேன் என்று வீம்பு செய்யமாட்டார்கள்.

வீடோ அலுவலகமோ சரியான விதிமுறைகளைக் பின்பற்றி தங்களுடன் இருப்பவர்களையும் பின்பற்ற வைப்பார்கள்.

எவரையும் சார்ந்திருக்க மாட்டார்கள். எவரையும் நம்பியிருக்க மாட்டார்கள். எவருக்காகவும் காத்திருக்க மாட்டார்கள்.

ஒரே நேரத்தில் தனியாளாக பலருடன் போகமாட்டார்கள்

தீய சேர்க்கையைத் தவிர்ப்பார்கள். தரம் தாழ்ந்த சுவாசத்தை தவிர்த்துவிடுவார்கள்.

முதன்மைத் தலைவனிடம் நேரடி பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வார்கள்‌ இடைத்தலைவர்களை நம்பமாட்டார்கள்.

எதையும் வித்யாசமாக சிந்திப்பார்கள். எதையும் மற்றவர்கள் கவனத்தில் பதியும்படி வித்தியாசமாகச் செய்வார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள்.

மனச்சாட்சி, நேர்மை, விச்வாசம் இவற்றை மதிப்பார்கள்‌ ஆனால் அரிய வாய்ப்புகளை இதன் பொருட்டு இழக்கமாட்டார்கள்.

திறமையுடன் விளம்பரமும் இருந்தால்தான் வெற்றி விரைந்து வரும் என்று உணர்ந்தவர்கள். தங்களுடைய சிறிய வெற்றியைக்கூட விளம்பரப்படுத்தி அடுத்த வெற்றிக்கு அஸ்திவாரம் போடுவார்கள்.

கடந்த காலத் தவறுகளுக்காக வரும், இழப்புகளுக்கும் வருத்தப்பட்டா.ர் வருங்கால வழக்குக்காக இன்றைய தேதியில் எறும்பென உழைப்பார்கள்.

எதிர்பாராத விதமாக பின்தங்கிவிட்டாலும் எப்படியும் குறுகிய காலத்துக்குள்ளேயே அதைச் சரிகட்டி விடுவார்கள்.

விமர்சனங்களை கவனிப்பார்கள். ஆனால் விமரிசனத்துப் பயந்து முயற்சியைத் கைவிட மாட்டார்கள்

தங்கள் ஆற்றல்களை அசைந்து செல்லும் ஓடையைப் போலல்லாமல். அணை திறந்த ஆறாக ஆவேசமாய் வெளிப்படுத்துவார்கள்.

அறிவுக்குப் பொருந்தாத காரணங்களான சம்பிரதாயம், சகுனம், சபலம், மூடநம்பிக்கைகள் இவற்றுக்கான தங்கள் முயற்சிகளை கைவிட மாட்டார்கள்.

எப்போது மௌனமாக இருக்கவேண்டுமோ அப்போது மௌனமாக இருப்பார்கள்.

 மன உறுதி - Achieving Goals Tips

தங்களால் செய்யமுடியாத விஷயங்களைப் பற்றியும், தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றியும் அரட்டை அடித்து நேரத்தையும் சக்தியையும் வீணாக்கமாட்டார்கள்.

எந்தச் சந்தர்ப்பங்களிலும் தங்கள் வார்த்தைகளில் பண்பும் நாகரீகமும் முறையாகப் பார்த்துக்கொள்வார்கள்.

புதிய நபர்களிடம் பேசும்போதும், முக்கியமான விஷயங்களைப் பேசும்போதும் வார்த்தைகளை அளந்து பேசுவார்கள்.

உரிய நேரத்தில் உரிய நபர்களிடம் பேசவேண்டிய விஷயத்தைப் பேச தவறமாட்டார்கள்.

புதிய புதிய வலிமைகளையும், தகுதிகளையும் தொடர்ந்து கூட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

தங்கள் குறைகளை தொடர்ந்து சரி செய்துகொண்டே இருப்பார்கள்.

தங்கள் குறிக்கோளுக்கு உதவும் எந்த புதிய விஷயத்தையும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளத் தயாராகமாட்டார்கள்.

தவறுகளை வாய்ப்புகளாக மாற்றும் கலை: மேதைகளின் பொன்மொழி ரகசியங்கள்!

தங்களுடைய குறைகளை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

தங்களிடம் உள்ள எல்லா மதங்களையும் பகிரங்கப் படுத்திவிட மாட்டார்கள்.‌ சில முக்கிய பதங்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எதிரிகளுக்கு ஒருமுறையாவது உணர்த்திவிடுவார்கள்.

எந்த திடீர்ப் பிரச்னையையும் சமாளிக்கும் முன்னேற்பாட்டுடனும். மன உறுதியுடனும் இருப்பார்கள்.

எல்லாம் ஒழுங்காகவே நடந்து கொண்டிருந்தாலும் விருப்பத்தகாத எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.

எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் தயார் நிலையிலேயே இருப்பார்கள்.

ஆதாரத் தொழிலில் முழுக் கவனமும் ஈடுபாடும் குறையாமல் பார்த்துக்கொண்டே, இணையாக ஒருசில உபதொழில்களையும் மேற்கொள்வார்கள்.

தங்கள் முழு கையிருப்பையும் தொழிலில் இரக்க மாட்டார்கள்.

தங்கள் சக்தியறிந்து தேவையுணர்ந்து, சுமையுணர்ந்து செலவு செய்வார்கள்.

வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதற்குள் செலவை அடங்குவார்கள்.

எந்த நிலையிலும் எந்த வயதிலும் ஒரு நிச்சயமான நிலையான வருமானம் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.

நிமிர்ந்து நில்! உங்களைப் போல வேறொரு நகல் கிடையாது: வெற்றிக்குத் தயாராகுங்கள்!

தங்கள் பொறுப்பில் இருக்கும் காரியத்தை உதவியாளரிடம் கொடுத்தாலும் அது நடக்கும் விதத்தைக் கவனிக்கத் தவறமாட்டார்கள்.

நன்கு பழகியவரே ஆயினும் முழுமையாக எல்லா விஷயங்களிலும் அவர்களை நம்பிவிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

திடீர் பிரச்னைகள் மற்றும் தோல்விகளில் இருந்து உடனடியாக மீண்டு வந்து, உங்கள் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறுதியான நிலையான வருமானத்தையும் வெற்றியையும் அமைத்துக் கொள்ளும் வல்லமையை நீங்கள் பெறுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online