Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செல்வ வளம் பெருக்கும் சோமவார தேய்பிறை பிரதோஷம்!

செல்வ வளம் பெருக்கும் சோமவார தேய்பிறை பிரதோஷம்!

Kalki Online 1 year ago

சிவ வழிபாடு என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரதோஷம்தான். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு நாள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில், சிவபெருமானை வழிபட உகந்த நாளாகக் கருதப்படுவது பிரதோஷ தினம்.

அது மட்டுமின்றி, வார நாட்களிலே சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவது திங்கட்கிழமை. ஆகையால்தான் சிவபெருமானுக்கு திங்கட்கிழமை சோமவார விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

அத்தகைய அற்புதமான திங்கட்கிழமையில் சிவன் அருளை பெறக்கூடிய பிரதோஷமும் இணைந்து வந்திருப்பது நமக்கு சகல செல்வங்களையும் தேடித் தருவதாக அமைந்துள்ளது. அப்படியான நல்ல நாளில் நாம் சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பத்தில் உள்ள தோஷங்களும் துன்பங்களும் நீங்கி இன்பமாக வாழ முடியும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துன்பம் நீங்க பிரதோஷ வழிபாடு: மனிதனுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்கு எப்போதும் குறையவே இல்லை என சொல்லலாம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான இன்னல்களும், துயரங்களும் இருந்தவண்ணம்தான் இருக்கிறது. இதிலிருந்து மீளத் தெரியாமல் மனிதன் தினம் தினம் போராடக்கூடிய நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படிப் போராடக்கூடிய மனிதனை கை தூக்கி விடக்கூடிய அற்புதமான தெய்வம்தான் சிவபெருமான்.

'நமசிவாயா' என்ற நாமத்தை சொன்னாலே நம்முடைய சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. சிவபெருமானை வழிபட அவருக்கு உகந்த நாள் என்றால் அது பிரதோஷம்தான். அந்த நாளில் நாம் அவரை வழிபடும்பொழுது ஈசனின் அருளை பரிபூரணமாகப் பெற முடியும் என்பது நம்பிக்கை. அப்படியான சோமவார தேய்பிறை பிரதோஷ தினம் இன்று. இன்றைய தினத்தில் நாம் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் செய்வது சிறப்பு. குறிப்பாக, பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக செய்யுங்கள். முடியாதவர்கள் ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்து முடித்து விடுங்கள்.

காபி பிரியர்களே, உஷார்! உஷார்!

இந்த நேரத்தில் உங்களால் முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆன நெய்வேத்தியத்தை சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம். எங்களால் வீட்டில் இப்படி வழிபட முடியாது என நினைப்பவர்கள் சிவன் ஆலயம் சென்று வழிபடலாம். ஆனால், வீட்டில் வழிபட்டாலும், ஆலயம் சென்று வழிபட்டாலும் சிவ வழிபாட்டுக்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுப்பது புண்ணியம்.

தீபமானது இருளை நீக்கி ஒளியை தரக்கூடியதாக உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பம், துயரம், தோஷம் போன்ற இருளை நீங்கி இன்பம், மகிழ்ச்சி, செல்வம் போன்ற வெளிச்சம் பெற இந்த தீப தானமானது உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே, பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில், சிவபெருமான் அபிஷேக பிரியர். ஆனால் இன்று தேய்பிறை சோமவார பிரதோஷம் என்பதால் இந்த தினத்தில் நல்லெண்ணையை வாங்கித் தருவது மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. அற்புதமான இந்த நாளைத் தவற விடாமல் சிவ வழிபாட்டுக்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்து நம் குடும்பத்தில் உள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி இன்பமாக வாழ வழி தேடிக் கொள்ளலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online