ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் மட்டும் ஒரு சவரன் ரூ.5,840 வரை உயர்ந்தது. இந்த வாரத் தொடக்கத்தில் ஓரளவு மட்டுமே தங்கம் விலையேறியது.
ஆனால் நேற்று (ஆகஸ்ட் 27) காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்தது. காலையில் ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,720 குறைந்தது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.2,280 வரை குறைந்தது.
தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறதே என கவலைப்பட்ட இல்லத்தரசிகளுக்கு இந்த செய்தி ஆறுதலைத் தந்துள்ளது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் விலை குறைய வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்பார்ப்புகள் மெய்யாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 27) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.285 குறைந்து ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.2,280 குறைந்து ரூ.1,17,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.265-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 28) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து, ரூ.1,17,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.
உலகளாவிய சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன. இருப்பினும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழே வருமா என்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா அல்லது ரூ.2 லட்சத்தை நோக்கி நகருமா என்பதை இந்த ஆண்டு இறுதியில் புரிந்து கொள்ளலாம். எப்படி இருப்பினும் விலை உயரவே வாய்ப்பு அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
Gold Price கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.14,725 1 சவரன் ரூ.1,17,800
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று தான் குறையத் தொடங்கியது. இந்த மாதத்தில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது நேற்று மட்டும் தான். இரண்டு முறை விலை குறைந்ததால், இம்மாத இறுதி வரை விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை உயர்வு யாருமே எதிர்பாராதது. இதனால் தான் டாலர் முதலீட்டை தவிர்த்து விட்டு, பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பினர். கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, இந்த ஆண்டு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்டில் இந்த மாதிரி முதலீடு செய்தால் பணமழை தான்!Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
