இன்றைய காலகட்டத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை ஒரு ட்ரெண்டாகவே வைத்திருக்கின்றனர்.
மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது; துரித உணவுகளை தவிர்ப்பது; அன்றாடம் உடற்பயிற்சி செய்வது என பெரும்பாலானோர் விழிப்புடன் இருக்கின்றனர். ஆனாலும், நாம் கவனிக்கத் தவறுகின்ற சில அன்றாட பழக்க வழக்கங்கள் நம்மை அறியாமலேயே முதுமையை நோக்கி நகர்த்துகின்றன. நரைமுடி சுருக்கம் மட்டுமல்லாமல் நம் உடலின் செல்களில் (cellular level) ஏற்படும் மாற்றமும் முதுமையாகும். அந்த வகையில், வேகமாக முதுமையை வரவழைக்கும் 8 பழக்கங்களை இப்பதிவில் காண்போம்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது:
Sittingஅன்றாட வாழ்க்கையில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பது உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தலுக்கு இணையான உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (US National Library of Medicine) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து டி.என்.ஏ-வில் உள்ள டெலோமியர்களை (Telomeres) சுருக்கி முதுமையை விரைவாக்குகிறது.
தூக்கமின்மை:
Sleepஉடல் தன்னைத் தானே தூக்கத்தின் போது தான் புதுப்பித்துக் கொண்டு ஹார்மோனை சமநிலைப்படுத்துகிறது. 5 மணி நேர தூக்கம் என்பது நாம் உடலுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதனால், சருமம் பாதிக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் சிதைக்கப்படுகிறது.
தீராத மன அழுத்தம் (Chronic Stress):
Mental stressதொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு உடலில் கார்டிசோல் (Cortisol) அளவு அதிகரித்து சருமத்தை சேதப்படுத்துகிறது. இதனால் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் தெரிகிறது. மேலும் இதய நோய், செரிமானக் கோளாறு, மனநல பாதிப்பு போன்றவை மன அழுத்தத்தால் ஏற்படுகிறது.
அதிகப்படியான ஸ்கிரீன் டைம் (Screen Time):
Digital screen தூக்கத்தின் சுழற்சியை மின்னணு சாதனங்களான கணினி மற்றும் மடிக்கணினிகளின் திரையில் இருந்து வரும் ப்ளூ லைட் (Blue Light) பாதிக்கிறது. மேலும் அதிக நேரம் இவற்றின் திரைகளை பார்ப்பது சருமத்திற்கு தீங்கு விளைவித்து முதுமையை வரவழைக்கிறது.
குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்:
Waterஉடல் உறுப்புகளின் இயக்கம் சீராக இயங்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தினமும் குறைவான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் வறட்சி (Dehydration) ஏற்பட்டு சருமம் மந்தமடைந்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
74 வயதிலும் 30 வயது இளைஞரை போல மம்முட்டி துள்ளி குதிப்பதன் ரகசியம் இதுதான்!சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
Sugar and Processed Foodsசருமத்தின் நெகிழ்வுத் தன்மையை குறைத்து (Elasticity) இள வயதிலேயே உடலுக்கு முதுமை தோற்றத்தை கொடுக்கும் கிளைகேஷன் (Glycation) என்ற செயல்முறையை அதிகப்படியான சர்க்கரையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உருவாக்குகிறது.
தசைப் பயிற்சிகளைப் புறக்கணித்தல் (Strength Training):
Exerciseவயதாகும் போது தசை நிறை (Muscle mass) நம் உடலில் குறைகிறது. நடைப்பயிற்சி மட்டும் தசை நிறையை அதிகரிக்க உதவாது. ஆகவே, தசைப் பயிற்சியை முறையாக செய்யாமல் விட்டால் நம் உடல் பலமிழந்து விரைவாகவே தளர்ந்து விடும்.
ஜிம்முக்கு போறதெல்லாம் பழசு! ஊர்ந்து போறது தான் புதுசு!சமூகத் தொடர்புகள் இல்லாமை:
Living Aloneஒருவர் சமூகத்துடன் தொடர்பில் இல்லாமல் தனிமையாக (Social Isolation) இருந்தாலும் முன்கூட்டியே உயிரிழப்பு அபாயம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்டை வீட்டினர், நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடி மகிழ்ந்து நேரத்தை செலவிடுவது உடலுக்கும், மனதுக்கும் இளமையைத் தரும் மருந்தாகும்.
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து மேற்கூறிய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் விரைவாக முதுமை அடைவதில் இருந்து தப்பித்து இளமையாக இருக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

