Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிப்பிக்குள் ஒரு ரகசியம்: ஒரிஜினல் முத்து உருவாவது எப்படி?

சிப்பிக்குள் ஒரு ரகசியம்: ஒரிஜினல் முத்து உருவாவது எப்படி?

Kalki Online 1 month ago

சிப்பிக்குள் முத்து உருவாகுவது ஒரு தற்காப்பு செயல் முறையாகும். சிப்பியின் ஓட்டிற்குள் மென்மையான பொருள் உள்ளே நுழையும்போது சிற்பி அதன் வெளிப்புற அடுக்கான எபிதீலியம் மூலம் பசை போன்ற பொருளை சுரக்கத் தொடங்குகிறது.

நாளடைவில் இந்த சுரப்பு அடுக்க முத்துக்களாக உருமாறுகிறது.

தொடக்கத்தில் சிறிய வெளிப்பாடாகத்தான் தெரியும். சிற்பியின் ஓட்டில் உள்ளே நுழையும் வெளிபொருள் அங்கேயே தங்கிக் கொள்ளும். இதனை தவிர்க்க சிற்பி எரிச்சல் ஊட்டும் சுரப்பியை பாதுகாப்பு அடுக்காக மாற்றுகிறது.

மன்னார் வளைகுடாவில் முத்துக்கள் அதிகமாக காணப்படும். முத்துச்சிப்பிகள் தங்கள் ஓட்டில் Naekriyaan என்ற திரவத்தை சுரக்கிறது. சிப்பியில் உள்ள முத்துக்கள் கருப்பு சிவப்பு தங்க நிறம் இளம் சிவப்பு வெள்ளை ஊதா போன்ற நிறங்களில் காணப்படும். வட்ட வடிவமான முத்துக்கள் அதிக விலை பெறும். எடை நிறம் பளபளப்பு போன்றவற்றை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது செயற்கை முத்துக்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் மன்னார் வளைகுடா குஜராத்தில் கட்ச் பகுதிகளில் அதிகமாக முத்து குளிப்பது நடைபெறுகிறது. கடலில் மூழ்கி சென்று முத்து எடுப்பது முத்து குளித்தல் எனப்படுகிறது. பாம்பன் முதல் மனப்பாடு வரை சுமார் 600 வகையான முத்துச்சிப்பி படுக்கைகள் உள்ளன. அக்டோபர் முதல் மே மாதம் வரை இதன் வளர்ச்சி காலமாகும். கடலில் அலைகள் குறைவாக இருக்கும்போது முத்து குளித்தல் நடைபெறுகிறது. இந்த காலத்தில் இரண்டு லட்சம் முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியும்.

மீன்கள் நிஜமாகவே எப்படி தூங்கும்னு தெரியுமா? அறிவியல் சொல்லும் அதிர வைக்கும் உண்மைகள் இதோ!

தூத்துக்குடி கடல் பகுதியில் முத்து சிப்பிகள் அதிகம் காணப்படுகிறது. கடலின் ஆழத்தில் இருக்கும் முத்துச்சிப்பி படுக்கைகள் அரசுக்கு சொந்தமானதாகும். எனவே முத்துக்களும் முத்து குளிப்பும் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முத்துச்சிப்பி படுக்கைகள் அதிகமாக காணப்பட்டால் சுமார் நான்கு ஆண்டுகள் வரை முத்துக்குளித்தல் நடைபெறும்.

பெரும்பாலும் முத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமான முத்துக்கள் ரத்தின கல்லுக்கு சமமாக மதிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் காணப்படும் முத்துக்கள் உயர்ந்த ரகமாக கருதப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட நிறங்களில் முத்துக்கள் கிடைக்கிறது. அந்தமான் தீவுகளில் கருப்பு நிற முத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. முத்துச்சிப்பியின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் முத்துக்கள் 100 வருடம் முதல் 300 வருடங்கள் வரை நிலைத்து நிற்கும். முத்துக்கள் நம் உடம்பில் பட்டால் உடம்பில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சியாக மாறும்.

இந்தியாவில் ஹைதராபாத்தில் அதிக அளவில் முத்துக்கள் விற்பனையாகிறது. ராஜஸ்தான் பெண்கள் முத்துக்களை

அதிக அளவில் விரும்பி அணிகிறார்கள். தற்போது சிப்பிக்குள் திரவத்தை செலுத்தி செயற்கையான முத்துக்களை உருவாக்கி வருகிறார்கள். முன்பெல்லாம் தமிழ்நாட்டில் முத்துக்குளிப்பவர்கள் காதில் பஞ்சு மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டு காலில் கனமான ஒரு பொருளை கட்டிக்கொண்டு கடலில் இறங்குவார்கள். இவர்கள் சுமார் 100 முதல் 200 அடி ஆழம் வரை செல்வார்கள். கடலின் அடிப்பகுதியை சென்று முத்துச்சிப்பிகளை சேகரித்து வந்தனர்.

திராட்சை சாப்பிடும் முன் எச்சரிக்கை! அதில் மறைந்திருக்கும் விஷத்தை அகற்றுவது எப்படி?

இத்தகைய செயல் மிகவும் ஆபத்தானது. திறமையானவர் களும் பயிற்சி பெற்றவர்களும் மட்டுமே முத்து குளிக்க முடியும். ஆனால் தற்போது முக கவசம் ஆக்ஸிஜன் மாஸ்க் ஆக்சிஜன் சிலிண்டருடன் கடலில் முத்து குளிக்க செல்கின்றனர். இவர்கள் கடலின் அடி ஆழம் வரை செல்கிறார்கள். இயற்கையாக விளையும் முத்துக்களுக்கு விலை அதிகம். தங்க நிற முத்துக் களுக்கும் கருப்பு முத்துகளுக்கும் கடும் கிராக்கி உள்ளது.

ஒரிஜினல் முத்துக்களை நம் பற்களில் வைத்து தேய்த்தால் கரகர என்று சத்தம் வரும் அதை வைத்து கண்டுபிடிக்கலாம் அல்லது முத்துக்களை ஒன்றோடு ஒன்று தேய்த்தால் மொர மொர என்று சத்தம் வரும் இதை வைத்து நாம் ஒரிஜினல் முத்து என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒரிஜினல் முத்துக்கள் நம் உடம்பில் பட்டால் மிகவும் குளிர்ச்சியாக காணப்படும். ஒரிஜினல் முத்துக்கள் சிறிது சொரசொரப்பாக காணப்படும். போலி முத்துக்கள் மற்றும் செயற்கை முத்துக்கள் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

ஒரிஜினல் முத்துக்களை தீயில் காட்டினால் கருகாது. உருகாது. இவற்றை வைத்து கண்டுபிடித்து விடலாம். செயற்கை முத்துக்கள் அனைத்தும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். கடலில் இறங்கி முத்து குளித்து முத்துக்கள் அடங்கிய சிப்பிகளை எடுத்து வருவது மிகப்பெரிய சாதனைதான்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online