Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிவகாசி ஆன்லைன் பட்டாசு மோசடி: தீபாவளிக்கு பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?

சிவகாசி ஆன்லைன் பட்டாசு மோசடி: தீபாவளிக்கு பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?

Kalki Online 1 week ago

சிவகாசி ஆன்லைன் பட்டாசு விற்பனையின் பெயரில் தீபாவளி மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் தற்போது கடுமையாக அதிகரித்துள்ளன.

உச்சநீதிமன்றம் பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை தடை செய்துள்ள நிலையிலும், பல போலி நபர்கள் தங்களை சிவகாசி டீலர்கள் என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.

கவர்ச்சிகரமான தள்ளுபடி விளம்பரங்கள்:

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் "85% முதல் 90% வரை தள்ளுபடி" மற்றும் "மொத்த விலையில் நேரடியாக சிவகாசியில் இருந்து வீடு தேடி வரும்" என்று போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

பிரபலங்கள் / யூடியூபர்களின் மலிவான விளம்பரங்கள்:

சில நேரங்களில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் இன்ஃப்ளுயன்சர்கள் மற்றும் யூடியூபர்களுக்கு இலவசமாக பட்டாசுகளைக் கொடுத்து, தங்கள் போலி பக்கங்களை விளம்பரம் செய்ய வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

போலி வலைதளங்கள்:

உண்மையான மற்றும் பிரபலமான சிவகாசி பட்டாசு நிறுவனங்களின் பெயர்கள், லோகோக்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி அதே பெயரில் போலியான சமூகவலைதள பக்கங்களை (fake pages) உருவாக்கி மோசடி செய்கின்றனர். சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு நிறுவனங்களின் பெயர்களை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்குவது அதிகரித்து வருகின்றது.

தனிப்பட்ட தகவல்கள் திருட்டு:

போலி வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், ஏடிஎம் கார்டு எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைத் திருடி பண மோசடியும் செய்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆன்லைனில் பட்டாசுகள் விற்க அனுமதி இல்லை. இருந்தபோதிலும் விதிமீறல்களைப் பயன்படுத்தி போலி வியாபாரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளி மெசேஜ் வந்தா உடனே கிளிக் பண்ணாதீங்க… உஷார் மக்களே!

முன்பணம் மற்றும் ஏமாற்றுதல்:

ஆர்டர் செய்யும் பொழுதே முழுத்தொகையையும் அல்லது முன்பணத்தையும் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். பணம் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட நபர் ஃபோனை அணைத்து விட்டு வலைத்தளத்தை முடக்கிவிடுகின்றனர். போலி கணக்குகள் முடக்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் எண்கள் பிளாக் செய்யப்படுகின்றன. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பட்டாசும் அனுப்பப்படுவதில்லை.

பகுதி விநியோகம் / மோசமான தரம்:

சில மோசடி நபர்கள் குறைந்த அளவு பட்டாசுகளை மட்டும் அனுப்பிவிட்டு அல்லது தரம் குறைந்த ஆபத்தான பட்டாசுகளை மட்டும் அனுப்பி ஏமாற்றுகின்றனர். ஒருவேளை பட்டாசுகளை டெலிவரி செய்தாலும் அவை விளம்பரத்தில் காட்டியதுபோல இருக்காது. காலாவதியான, வெடிக்காத அல்லது மிகக்குறைந்த தரம் கொண்ட உள்ளூர் கள்ளச்சந்தை பட்டாசுகளை சிவகாசி பிராண்ட் பெட்டிகளில் வைத்து அனுப்பி ஏமாற்றுகிறார்கள்.

 ஆன்லைன் பட்டாசு - Sivakasi crackers fraud,

பார்சல் மற்றும் கூடுதல் கட்டண மோசடி:

பட்டாசுகளை அனுப்பிவிட்டதாகக் கூறி போலியான லாரி ரசீதை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது. பின்னர் கூரியர் கட்டணம், ஜிஎஸ்டி சிக்கல் அல்லது டெலிவரி சார்ஜ் எனப் பல காரணங்களைக் கூறி மேலும் கூடுதல் பணத்தை பறிப்பது போன்ற மோசடிகளும் நடைபெறுகின்றன.

காவல்துறையின் எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்:

அதிகப்படியான தள்ளுபடியை நம்பாதீர்கள். காரணம் 80% முதல் 90% வரை தள்ளுபடி தருகிறோம் என்று கூறினால் அது பெரும்பாலும் மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்தவேண்டாம்.

ஆன்லைனில் பட்டாசு வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சிவகாசியில் உண்மையான உரிமம் பெற்ற கடை உள்ளதா, அதன் தொலைபேசி எண் மற்றும் விவரங்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பட்டாசு வாங்கும் கடை உண்மையான சிவகாசி பட்டாசு கடையா என்பதை Google மேப்ஸ், ஜிஎஸ்டி விவரங்கள் மற்றும் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அறியப்படாத தனிநபர்களின் யூபிஐ (UPI) கணக்குகளுக்கு அதாவது தனிப்பட்ட கணக்குகளுக்கு முழுத் தொகையையும் முன்பணமாக அனுப்புவதைத் தவிர்க்கவும்.

அப்பா... எனக்கு பட்டாசு வாங்கி தருவியா? - விலை உயர்த்தப்பட்டதால் கண்ணீரில் குழந்தைகள்..!!

சமூக வலைதளங்களில் வரும் அறிமுகம் இல்லாத லிங்க்குகளை கிளிக் செய்வதோ, பணம் செலுத்துவதோ தவிர்க்கப்பட வேண்டும். நேரடி மற்றும் நம்பகமான அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் வாங்குவது மட்டுமே பாதுகாப்பானது.

இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப் படுபவராக இருந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online