Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிவப்பு குங்குமம் அறிவோம்... அதென்ன பச்சை குங்குமம்? அதிர்ஷ்டம் தரும் குபேர ரகசியம்!

சிவப்பு குங்குமம் அறிவோம்... அதென்ன பச்சை குங்குமம்? அதிர்ஷ்டம் தரும் குபேர ரகசியம்!

Kalki Online 2 weeks ago

ந்து சமய வழிபாட்டில் குங்குமத்திற்கு உயர்ந்த இடம் உண்டு‌. சக்தியின் சின்னமாகவும், மங்களத்தின் அடையாளமாகவும், மகாலக்ஷ்மி யின் குறியீடாகவும் குங்குமம் போற்றப்படுகிறது‌.

இது ஆன்மிக நம்பிக்கையுடன், குடும்ப பாரம்பரியத்தையும் இணைக்கும் புனித வழிபாடாகும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் குங்குமம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.‌ ஆனால் பச்சை நிறக் குங்குமம் பற்றிப் பலருக்குத் தெரியாது. இது ஏன் தனிச்சிறப்பு வாய்ந்தது தெரியுமா? இதை குபேர குங்குமம் என்று அழைப்பார்கள்‌ இதன் பின்னால் உள்ள ஆன்மிக மரபு பற்றித் தெரிந்துகொள்வோம்

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் குங்குமம் மஞ்சள், சுண்ணாம்பு போன்ற இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது சக்தியைக் குறிக்கும் வழிபாட்டுச் சின்னமாகக் கருதப்படுகிறது‌.

பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் அணிவது மகாலக்ஷ்மியின் அருளைப் பெறும் வழி‌ என்றும் மங்களத்தின் அடையாளம் என்றும் நம்பிக்கைகள் கூறுகின்றன.

ஆனால் பச்சை குங்குமம் மகாலக்ஷ்மி மற்றும் குபேர வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சில புனித மூலிகைகள் மற்றும் பூஜைப் பொருட்களால் தயாரிக்கப்படும் சிறப்புக் குங்குமமாக பாரம்பர்யத்தில் கருதப்படுகிறது. இதை பக்தியுடன் பயன் படுத்துவதால் செல்ல வளம் பெருகும்,,தொழில் முன்னேற்றம் ஏற்படும், மன உறுதி அதிகரிக்கும், இறை அருள் கிடைக்கும்.

 Kubera Kumkum - பச்சை குங்குமம்

பச்சை குங்குமம் வழங்கப்படும் சிறப்புத் திருத்தலங்கள்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏகம்பரநாதர் கோவிலில் குபேரனுக்கு தனிசன்னதி உண்டு. இங்கு குபேரன் தன் துணைவியார் சித்ரலேகையுடன் தாமரையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.‌ இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைக் குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுவது தனிச்சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரனுக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தப் படுகின்றன.

பச்சையம்மன் திருக்கோவில்கள்:

தமிழகத்தில் பல பகுதிகளில் குலதெய்வமாக வணங்கப்படும் பச்சையம்மன் ஆலயங்களிலும் பச்சை குங்குமம் வழங்கப்படுகிறது.‌ ஈரோடு மாவட்டம அவல் பூந்துறை அருகே உள்ளது இரட்டைச் சுற்றிப் பாளையம்.

இங்கு அமைந்துள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் மூலிகைகளால் தயாரிக்கப்படும் பச்சை குங்குமம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த குங்குமம் தயாரிப்பில் மஞ்சள், கற்றாழை, வேம்பு அரசமர இலை துளசி ஆகிய மூலிகைகள் இடம் பெறுகின்றன.

பக்தர்கள் தினமும் இந்த குபேரகுங்குமத்தை நெற்றியில் அணியலாம். மகாலக்ஷ்மி குபேரன் மற்றும் பைரவர் வழிபாட்டில் பயன்படுத்தலாம்‌. இதனால் செல்வவளம் பெருகும், கல்வி மேம்பாடு அடையும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். கடன் சுமை குறையும், திருமணத்தடை நீங்கும். முதலில் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்னர் வீட்டில் பயன்படுத்தலாம்.

சைவ வழிபாட்டில் மஞ்சள், குங்குமம் தவிர்க்கப்படுவதன் ரகசியம்!

இந்த குபேர குங்குமத்தை தொடர்ந்து 41நாட்கள் பயன்படுத்தினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை‌. இறைவனை உண்மையான பக்தியுடன் வாங்குபவர்களுக்கு எந்த ஒரு புனித பொருளும் இறை அருளை நினைவூட்டும் ஒரு சாதனமாகவே அமைகிறது.‌ அந்த வகையில் குபேர குங்குமம் நான் பச்சை குங்குமத்தை பயன்படுத்தி குபேரன் பைரவர் மற்றும் மகாலக்ஷ்மி யின் அருளைப் பெறுவோம்.

இந்த தெய்வீக ஆன்மிக வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் இல்லத்தில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி, செல்வ வளம் தடையின்றி பெருகும். கடன் சுமைகளிலிருந்து முழுமையான விடுதலை பெற்று, குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை காணாத மாபெரும் வெற்றியையும் லாபத்தையும் உங்களால் நிச்சயம் அடைய முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online