Dailyhunt
சூப்பர் சுவையான உடுப்பி ஸ்டைல் ரசம் வடை - பீட்ரூட் பணியாரம் ரெசிபிஸ்!

சூப்பர் சுவையான உடுப்பி ஸ்டைல் ரசம் வடை - பீட்ரூட் பணியாரம் ரெசிபிஸ்!

Kalki Online 1 year ago

ன்றைக்கு சுவையான உடுப்பி ரசம் வடை மற்றும் பீட்ரூட் பணியாரம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

உடுப்பி ரசம் வடை செய்ய தேவையான பொருட்கள்.

ரசம் பொடி செய்ய,

மல்லி - 1 தேக்கரண்டி.

மிளகு - 1 தேக்கரண்டி.

சீரகம் - 1 தேக்கரண்டி.

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய் - 2

கருவேப்பிலை - சிறிதளவு.

எண்ணெய் - சிறிதளவு.

கடுகு - 1 தேக்கரண்டி.

சீரகம் - 1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள் - சிறிதளவு.

கருவேப்பிலை - சிறிதளவு.

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1.

புளி கரைச்சல் - 1 கப்.

துவரம் பருப்பு - 1 கப்.

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.

உப்பு - தேவையான அளவு.

வெல்லம் - 1 துண்டு.

வடை செய்ய,

உளுந்து - 1 கப்.

அரிசி மாவு - 1 தேக்கரண்டி.

இஞ்சி - 1 துண்டு.

பச்சை மிளகாய் - 1.

கொத்தமல்லி - சிறிதளவு.

கருவேப்பிலை - சிறிதளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

உடுப்பி ரசம் வடை செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி சீரகம், மிளகு 1 தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு நறுக்கிய தக்காளி 1 கப், பச்சை மிளகாய் 1, புளி கரைச்சல் 1 கப் சேர்த்து கொதிக்கவிடவும். இத்துடன் மஞ்சள் தூள் ½ கப், உப்பு தேவையான அளவு, வெல்லம் 1 துண்டு சேர்த்து கொதிக்க விடவும். வேக வைத்த துவரம் பருப்பு 1 கப், 4 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கடைசியாக அரைத்து வைத்திருக்கும் ரசம் பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

வடை செய்வதற்கு முதலில் 1 கப் உளுந்தை 1 ½ மணி நேரம் ஊறவைத்து அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து மாவை எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் அதை மாற்றிக் கொண்டு அரிசி மாவு1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சின்ன சின்ன பந்துகளாக மாவை எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது செய்து வைத்திருக்கும் ரசத்தில் வடையை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான உடுப்பி ரசம் வடை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சத்து நிறைந்த கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகள் சில...

பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 கப்.

வெங்காயம் - 1.

பச்சை மிளகாய் - 1.

கருவேப்பிலை - சிறிதளவு.

கொத்தமல்லி - சிறிதளவு.

துருவிய பீட்ரூட் - 1 கப்.

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

பன்னீர் - சிறிதளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

பீட்ரூட் பணியாரம் செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் இட்லி மாவு 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, துருவிய பீட்ரூட் 1 கப், துருவிய பன்னீர் சிறிளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது பணியாரக்கல்லை சூடுப்பண்ணி விட்டு எண்ணெய் சிறிது ஊற்றி மாவை பணியாரக்கல்லில் ஒவ்வொன்றாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சூவையான பீட்ரூட் பணியாரம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வேற லெவல் சுவையில் கார்ன் பகோடா - வெற்றிலை பாயாசம் ரெசிபிஸ்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online