Dailyhunt
சூப்பர் சுவையில் நூல்கோல் குருமா-சிகப்பு கீரை கடையல் செய்யலாம் வாங்க!

சூப்பர் சுவையில் நூல்கோல் குருமா-சிகப்பு கீரை கடையல் செய்யலாம் வாங்க!

Kalki Online 1 year ago

ன்றைக்கு சுவையான நூல்கோல் குருமா மற்றும் சிகப்பு கீரை கடையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

நூல்கோல் குருமா செய்ய தேவையான பொருட்கள்.

பேஸ்ட் செய்ய,

தேங்காய்-1/4 கப்.

பச்சை மிளகாய்-3

பட்டை-1

கிராம்பு-1

ஏலக்காய்-1

சோம்பு-1 தேக்கரண்டி.

கசகசா-1 தேக்கரண்டி.

முந்திரி-5

குருமா செய்ய,

எண்ணெய்-1 தேக்கரண்டி.

பிரிஞ்சி இலை-1

சோம்பு-1 தேக்கரண்டி.

வெங்காயம்-2

தக்காளி-1

நூல்கோல்-2

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

கல்உப்பு-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

நூல்கோல் குருமா செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் ¼ கப் துருவிய தேங்காய், 3 பச்சை மிளகாய், 1 துண்டு பட்டை, 1 ஏலக்காய், கிராம்பு 1, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் 5 முந்திரி, 1 தேக்கரண்டி கசகசாவை சுடுத்தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து இத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு 1 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1, நறுக்கிய வெங்காயம் 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு நறுக்கிய 2 நூல்கோலை சேர்த்து அத்துடன் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கல்உப்பு சேர்த்து விட்டு அரைத்த பேஸ்ட்டை சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் நூல்கோல் குருமா தயார். நீங்களும் இந்த சுவையான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சிகப்பு கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்.

நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

உளுந்து-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய்-4

பூண்டு-12

புளி-நெல்லிக்காய் அளவு.

சின்ன வெங்காயம்-10

தக்காளி-1

சிகப்பு கீரை-1 கட்டு

உப்பு-1/2 தேக்கரண்டி.

அல்டிமேட் சுவையில் வாழைத்தண்டு சூப் - மாதுளை பொரியல் ரெசிபிஸ்!

சிகப்பு கீரை கடையல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுந்து, ½ தேக்கரண்டி சீரகம், 12 பூண்டு, 4 காய்ந்த மிளகாய், 1 நெல்லிக்காய் அளவு புளியை வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் 10 சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கியதும் நறுக்கி வைத்திருக்கும் சிகப்பு கீரை 1 கட்டை சேர்த்துக்கொள்ளவும். இதற்கு ½ தேக்கரண்டி உப்பு, ½ கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். தண்ணீர் சற்று சுண்டி வந்ததும் எடுத்து கடையவும். இந்த சிகப்பு கீரை கடையல் ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. அவ்வளவுதான் சிகப்பு கீரை கடையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online