சூடு சாதத்திற்கு ஒரு சிறந்த காமினேஷன் ஆக புதுவிதமான சுவையில் தக்காளி பச்சடி ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தக்காளி புதினா பச்சடி
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
வரமல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 6
புதினா - 200 கிராம்
மல்லித்தலை - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
புளி - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி மற்றும் புதினாவை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் வேர்க்கடலை, வர மல்லி, சீரகம், எள் சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி புதினா மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி , உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஆறவைக்க வேண்டும். வதக்கிய அனைத்து ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பெரிந்த வந்த உடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் உளுந்தம் பருப்பு, வரவத்தல் சேர்த்து நன்கு சிவந்த வந்த உடன் தாழித்து கொட்டவும். சுவையான கமகமக்கும் தக்காளி புதினா பச்சடி தயார்.
கிராமத்து சுவையில் பிரண்டை துவையல், வாழைக்காய் பொடிமாஸ்! அசத்தல் காம்போ!இதனை சுடு சாதத்துடன் மிக்ஸ் செய்து வெரைட்டி ரைஸ் ஆகவும் குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் ரெசிபியாக கொடுத்து விடலாம்.
கத்தரிக்காய் ஃப்ரை ரெசிபி
கத்தரிக்காயில் புளிக்குழம்பு, கூட்டு இதுபோல்தான் செய்த சமைத்து வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக கத்தரிக்காய் பிரை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
கத்தரிக்காய் - 1
பூண்டு - 3 பல்
காஷ்மீரின் மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
செய்முறை;
ஒரு சிறிய பாத்திரத்தில் தோல் நீக்கிய பூண்டு,காஷ்மீரி மிளகாய், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு ஊரிய உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு முழு கத்திரிக்காயை மூன்று துண்டுகளாக நறுக்கி அரைத்து வைத்திருந்த மசாலாவை இரண்டு புறமும் சேர்த்து தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் பொறித்து எடுக்கவும். சுவையான கமகமக்கும் கத்திரிக்காய் ஃப்ரை தயார். இது ரசம் மற்றும் சுடு சாதத்திற்கு சிறந்த சைடு டிஷ்.
முருங்கைக்கீரையை உணவில் சேர்க்க சாக்கு சொல்ல முடியாது! 4 சுவையான ரெசிபிகள்!
