Dailyhunt
சுவையான ஆவாரம்பூ தோசை - பொரிச்ச குழம்பு செய்யலாம் வாங்க!

சுவையான ஆவாரம்பூ தோசை - பொரிச்ச குழம்பு செய்யலாம் வாங்க!

Kalki Online 1 year ago

ன்றைக்கு சுவையான ஆவாரம்பூ தோசை மற்றும் பொரிச்ச குழம்பு ரெசிபிஸை டேஸ்டியாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

ஆவாரம்பூ தோசை செய்ய தேவையான பொருட்கள்.

ஆவாரம்பூ-1 கப்.

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

சீரகம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

தோசை மாவு-4 கப்.

எண்ணெய்-தேவையான அளவு.

ஆவாரம்பூ செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் ஆவாரம்பூ 1 கப்பை நன்றாக கழுவி சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது தோசை மாவு 4 கப் எடுத்துக் கொள்ளவும். அதில் இந்த பேஸ்ட்டை கலந்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் சிறிது தடவி தோசை மாவை 1 கரண்டி ஊற்றி எண்ணெய் விட்டு நன்றாக முறுகலாக தோசை வெந்ததும் எடுக்கவும். இந்த தோசையை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

பொரிச்ச குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

கத்தரிக்காய்-2

உருளை-2

முருங்கை-2

துருவிய தேங்காய்-1 கப்.

பொட்டுக்கடலை-1 கப்.

சோம்பு-1 தேக்கரண்டி.

கசகசா- 1 தேக்கரண்டி.

பட்டை-1

லவங்கம்-1

ஏலக்காய்-2

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-1 கொத்து.

பச்சை மிளகாய்-4

வெங்காயம்-2

தக்காளி-2

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா- சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

கந்த சஷ்டி விரதம் ஸ்பெஷல்: திருச்செந்தூர் கோவில் புட்டமுது செய்யலாம் வாங்க!

பொரிச்ச குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் கத்தரிக்காய் 2, முறுங்கைக்காய் 2, உருளை 2 நன்றாக துண்டு துண்டாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் துருவிய தேங்காய் 1 கப், பொட்டுக்கடலை 1 கப், சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா 1 தேக்கரண்டி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிது ஊற்றி அதில் பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் 2, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து பொரித்துவிட்டு கருவேப்பிலை 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, நறுக்கிய பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு தேவையான அளவு சேர்த்துவிட்டு மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்.

இப்போது வெட்டி வைத்திருக்கும் காய்கறிகள், கரம் மசாலா சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். இப்போது தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து மூடிப்போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான பொரிச்ச குழம்பு தயார். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online