Dailyhunt
சுவையான மரவள்ளிக்கிழங்கு மசால் வடை - சோயா சுக்கா செய்யலாமா?

சுவையான மரவள்ளிக்கிழங்கு மசால் வடை - சோயா சுக்கா செய்யலாமா?

Kalki Online 1 year ago

ன்றைக்கு மரவள்ளிக்கிழங்கு மசால் வடை மற்றும் சோயா சுக்கா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்ய தேவையான பொருட்கள்.

மரவள்ளிக்கிழங்கு- 2

பச்சை மிளகாய்- 2

வரமிளகாய்- 2

இஞ்சி- 1 துண்டு.

பூண்டு- 6

சோம்பு- 1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு- 1கப் கொத்தமல்லி, கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்- 2

எண்ணெய்- தேவையான அளவு.

மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்முறை விளக்கம்.

முதலில் மரவள்ளிக்கிழங்கு 2 தோல் நீக்கி எடுத்துக் கொண்டு நன்றாக கழுவிய பிறகு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் பச்சை மிளகாய் 2, வரமிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6, சோம்பு 1 தேக்கரண்டி, 4 மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு 1 கப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதை மரவள்ளிக்கிழங்கோடு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இத்துடன் 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து வடையை தட்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் தட்டி வைத்த வடையை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சோயா சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:

சோயா-1 கப்.

எண்ணெய்-4 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.

சுக்கா மசாலா செய்ய,

மிளகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

பட்டை-2

கிராம்பு-4

ஏலக்காய்-2

சோயா சுக்கா செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி சோம்பு, கருவேப்பிலை சிறிதளவு, வெங்காயம் நறுக்கியது 2, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். சோயா 1 கப்பை சுடுதண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மசாலாவிற்கு மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும். இப்போது இதில் 1கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடிப்போட்டு வேகவிடவும்.

சுக்கா மசாலா செய்ய 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி சோம்பு, 2 பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான சோயா சுக்கா தயார். நீங்களும் இந்த சுவையான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

அசத்தும் சுவையில் ராகி உப்புமா - பொன்னாங்கன்னி கீரை துவையல் செய்யலாம் வாங்க!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online