Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுவாமிக்கு நெய் தீப வழிபாடும் பலன்களும்!

சுவாமிக்கு நெய் தீப வழிபாடும் பலன்களும்!

Kalki Online 1 year ago

றை வழிபாட்டு முறைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்குவதும் என்பது முக்கியமான ஒன்றாகும். தீப ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், தீபத்தின் சுடரில் மகாலட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம்.

ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாகக் கூறப்படுகிறது.

வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதும், மாலை 6 மணி அளவில் சந்தியா கால நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதிலும் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் நம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் எனவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி வழிபடுகையில், எத்தனை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு, அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும்!

கோயில்களில் ஏற்றப்படும் நெய் தீபத்தின் எண்ணிக்கையும் பலன்களும்:

ஐந்து நெய் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சிறந்த கல்வி ஞானம் பெறலாம்.

ஒன்பது நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் விலகும்.

பன்னிரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி, வெற்றி உண்டாகும்.

பதினெட்டு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் விலகும்.

இருபத்தேழு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை விலகும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

முப்பத்தாறு நெய் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தார் சகல தோஷமும் நீங்கும்.

நாற்பத்தெட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

நூற்றியெட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மன் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

எந்த நாளில் பைரவ விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

நெய் விளக்கு ஏற்றி வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்துள்ள நாகராஜர் சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட, தம்பதியர் இடையே ஒற்றுமை நிலைக்கும்.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை தினங்களில் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட, தோஷங்கள் நீங்கும்.

வியாழக்கிழமை நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர, விரைவில் கருத்தரிக்கும் என்பது ஐதீகம். மேலும், தீபம் ஏற்றும்போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசை, மேற்கு திசை பார்த்தவாறு ஏற்றுவது நல்ல பலனை அளிக்கும். அதோடு, செல்வச் செழிப்பையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இறைவனின் அருளை எளிதில் பெற உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த பரிகாரமாகும். அதிகாலை, நண்பகல் தீபம் ஏற்றி வழிபடுவது அதிகப் பலனைக் கொடுக்கும். மேலும், இறைவனின் கருவறையில் இருக்கும் தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட கடுமையான பிரச்னைகள் கூட விலகும் என்பது ஐதீகம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online