Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!

சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!

Kalki Online 1 month ago
 deepam strip

சுவாமிமலை முருகன் தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசித்த குரு ஸ்தலமாக, 60 தமிழ் ஆண்டுகளை குறிக்கும் படிகள், தங்க ரதம், தினமும் ஆறு கால பூஜைகள், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி போன்ற திருவிழாக்கள், படி பூஜை, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகள், நெல்லி தலவிருட்சம், குமரத்துறை தீர்த்தம் ஆகியவற்றால் ஆன்மிக மையமாக விளங்குகிறது.

சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்:

6 அடி உயரமும், அகன்ற தோள்களும் கொண்டவராக, சக்திவேல் மற்றும் தண்டத்தை ஏந்தியபடி காட்சி தருகிறார் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி. குடுமி, மார்பில் பூணூல், வலக்கையில் தண்டம், இடக்கையை மடியில் ஏந்தியபடி காட்சி தருகிறார். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று தெய்வீக சக்திகளை குறிக்கும் வஜ்ர வேலை ஏந்தியபடி அருள் புரிகிறார்.

தல விருட்சம் நெல்லி மரம். இங்குள்ள தீர்த்தங்கள் வஜ்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்ரா புஷ்கரணி மற்றும் குமரத்துறை (காவேரி) ஆகியவை. நேத்ர விநாயகரை தரிசித்த பார்வையற்ற பக்தர் ஒருவர் நேத்ர தீர்த்தத்தில் நீராடி கண்பார்வை பெற்றதாக புராணம் கூறுகிறது.

மூலவர் சுவாமிநாதன், அம்பாள் வள்ளி - தெய்வானை, தலவிருட்சம் நெல்லி மரம்.

2000 ஆண்டுகள் பழமையானது. புராணப் பெயர் திருவேரகம்.

விசேஷ நாட்களில் இக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு தங்க கவசம், வைர கிரீடம் மற்றும் வைரவேல் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள் பாலிக்கிறார். இந்த சிறப்பு தரிசனத்தின் போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ஹைதராபாத் போனாலு திருவிழாவின் மிரட்டலான ரகசியங்களும் வரலாற்று உண்மைகளும்!

தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த 'குருவாக' வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் சுவாமிமலை. முருகனின் அறுபடை வீடுகளில் 4வது படைவீடாகத் திகழும் சுவாமிமலை கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுவாமிநாத சுவாமி சன்னதி சுமார் 60 அடி உயரம் உள்ள செயற்கைக் குன்றின் மீது அமைந்துள்ளது.

இந்த குன்றின் மீது ஏற 60 தமிழ் வருடங்களை குறிக்கும் வகையில் 60 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் சந்நிதிக்கு முன்பாக பொதுவாக மயில் வாகனம் காணப்படும். ஆனால் இங்கு மயில் வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

இந்து புராணங்களின்படி சிவபெருமானின் மகனான முருகன் இந்த இடத்தில் தான் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கு விளக்கினார். அதன் காரணமாகவே அவர் சுவாமிநாத சுவாமி என்ற பெயரைப் பெற்றார்.

 Swamimalai Swaminathaswamy Temple

'திருவேரகம்' என அழைக்கப்படும் சுவாமிமலைக் கோவில் மிகவும் பழமையானது. மலையின் அடிவாரத்தில் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி தேவியின் சன்னதிகளும், 60 அடி உயரமுள்ள குன்றின் உச்சியில் முருகனின் சன்னதியும் அமைந்துள்ளது. கோவிலின் புராணக் கதைகளை சித்தரிக்கும் வகையில் அழகான சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன.

சுவாமிமலை கோவில் சிறப்பு:

கருவறையில் இறைவன் வீற்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையார் போல காட்சி தருவதும், இது சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒருவரே என்ற தத்துவத்தை உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. இங்கு இறைவனுக்கு முன்பாக மயிலுக்கு பதில் யானை உள்ளது.

இது முருகப்பெருமான் ஹரிகேசன் என்ற அசுரனை அழித்த பிறகு இந்திரனால் பரிசளிக்கப்பட்ட யானை ஆகும்.

அருணகிரிநாதர் இக்கோவிலுக்கு வந்து முருகனையும், 'திருப்புக்காடு' என்று அழைக்கப்படும் சுவாமிமலையின் அழகையும் போற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். நக்கீரர் பெருமான் இக்கோவிலில் 'திருமுருகாற்றுப்படையை' இயற்றினார்.

வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். சிறப்பு நாட்களில் தங்கரதம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பிரகாரமும் இக்கோவிலில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள தங்க ரதம் 80 கிலோ வெள்ளி, 7 கிலோ தங்கம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் ஆனது.

ஸ்ரீரங்கம் ஆடி மாத விழா: காவிரி அன்னைக்கு ரங்கநாதர் சீர் தரும் அற்புத மரபு!

படி பூஜை:

60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்த மலைக்கோவிலை அடைய 60 படிகள் உள்ளன. தமிழ் ஆண்டுகளின் தெய்வங்கள், படிகளின் வடிவில் முருகப்பெருமானை வழிபடுவதாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் தேங்காய், பழங்கள் மற்றும் பக்தி பாடல்களுடன் படிகளுக்கான சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. அதிகாலை 5.30 மணிக்கு உஷத் காலம் முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

வைர வேல், வைர கிரீடம் மற்றும் தங்க கவசம்:

கந்த சஷ்டி, தைப்பூசம் மற்றும் தமிழ் புத்தாண்டு போன்ற விழா காலங்களில் மூலவருக்கு வைரவேல் மற்றும் தங்க கவச அலங்காரம் சிறப்பாக செய்யப்படுகிறது.

சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு நாட்களில் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, வைர கிரீடமும் அணிவிக்கப்பட்டு, முருகப் பெருமானின் திருக்கரத்தில் ஒளி பெருந்திய வைரவேல் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் அலங்காரம் செய்யப்படுகிறது.

அத்துடன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மூலவருக்கு வைரவேல் மற்றும் தங்க கவசம் சாற்றப்படுகிறது. வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வியாழக்கிழமை சென்றால் தங்கக் கவசம் மற்றும் வைரவேல் தரிசனத்தை சிரமமின்றி தரிசிக்கலாம். இந்தப் பேரொளி தரிசனம் பக்தர்களுக்கு மன அமைதியையும், சகல சௌபாக்கங்களையும் தரும் என்பது ஐதீகம்.

தியானம் வாழ்க்கையை மாற்றுமா? ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

திருவிழாக்கள்:

திருக்கார்த்திகைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். சித்திரை பிரம்மோற்சவம் அதுவும் 10 நாட்கள் நடைபெறும். வைகாசி விசாகம், தமிழ் புத்தாண்டு தினத்தன்று படித்திருவிழா, ஆவணி பவித்ரோத்சவம், 10 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டம், கந்த சஷ்டிப் பெருவிழா, திருக்கல்யாணம் போன்றவை இக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.

இத்தலத்தின் சிறப்புமிக்க தங்க கவச மற்றும் வைரவேல் தரிசன வழிமுறைகளை அறிந்துகொள்வதன் மூலம், மன அமைதியையும் வாழ்க்கையில் நிலையான ஆன்மீக முன்னேற்றத்தையும் முழுமையாகப் பெற முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online