Dailyhunt
தல இல்லை; கேப்டன் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ருசிகரத் தகவல்!

தல இல்லை; கேப்டன் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ருசிகரத் தகவல்!

Kalki Online 1 year ago

மிழ் சினிமாவில் ஆண்டுதோறும் எண்ணற்ற படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் பல படங்கள் நடிகர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தாலும், சில படங்களின் மூலம் தான் இயக்குநர்கள் பேசப்படுகின்றனர்.

அவ்வகையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் எது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் முக்கியமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்குநர் அவதாரம் எடுப்பதற்கு முன்பு எஸ்‌.ஜே. சூர்யா இயக்கிய வாலி மற்றும் குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படம் தீனா. அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பெற்றதோடு, அஜித்திற்கு தல என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தது. இயக்குநராக சிறப்பாக செயல்பட்ட ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படத்தின் மூலம் அவ்வளவாக பெயர் கிடைக்கவில்லை. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, நடிகர் அஜித் கொண்டாடப்பட்டாரே தவிர, படத்தின் இயக்குநரை யாரும் கொண்டாடவில்லை.

இயக்குநராக எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் குறித்து முருகதாஸ் கூறுகையில், "தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலம் நாம் ஒரு இயக்குநராகி விட்டோம். இப்படத்தில் நமக்கு பெயர் கிடைக்கவில்ல்லை என்று சோர்ந்து விடாமல், இனி நமக்கான பெயரை பெற வேண்டும் என முயற்சித்தேன். அப்படி நான் எடுத்த திரைப்படம் தான் ரமணா. இப்படம் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதோடு, தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்தது. தீனாவில் அஜித் மூலம் கிடைக்காத பெயர், ரமணாவில் கேப்டன் விஜயகாந்த் மூலம் எனக்கு கிடைத்தது" எனத் தெரிவித்தார். ரமணா படத்தின் வசனங்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ். இதில் கஜினி மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது. தளபதி விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தன. அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் விஜய் சேதுபதி!

அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தை இயக்கினார். இப்படம் சொல்லிக்கொள்ளும் படி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஓரளவு இலாபத்தைப் பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் வெற்றிப் படமாக எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online