Dailyhunt
தலையணை இல்லாத தூக்கத்தால் கிடைக்கும் 5 பலன்கள்!

தலையணை இல்லாத தூக்கத்தால் கிடைக்கும் 5 பலன்கள்!

Kalki Online 1 year ago

தூக்கம் என்றவுடன் தலையணை, படுக்கை போன்றவை நம் கண் முன்னே வந்து நிற்கும். அதிலும், 'தலையணை இருந்தால்தான் எனக்குத் தூக்கம் வரும்' என்று சொல்வோர் அனேகம்.

ஆனால், தலையணை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் 5 பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. மன அழுத்தம் நீங்கும்: தலையணை வைத்துத் தூங்கும்போது மன அழுத்தம் உருவாகும் என்பதால் தூங்கும்போது மன அழுத்தம் அல்லது பதற்றமாக இருந்தால் தலையணை பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும். ஆகவே, மன அழுத்தத்தில் இருந்து விடுபட தலையணையை தவிர்த்து விடுங்கள்.

2. தலைவலி வராது: தலையணை வைத்துத் தூங்குவதால் தலைக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போகக்கூடும். இதன் காரணமாக நரம்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாகக் கிடைக்காமல் தலைவலியும் ஏற்படக்கூடும் என்பதால் தலையணை இல்லாமல் தலை சாய்த்து தலைவலியை தவிர்த்து விடுங்கள்.

பிளேடுகளின் நடுப்பகுதி ஏன் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றுள்ளன தெரியுமா?

3. சருமப் பிரச்னைகள் வராது: தலையணை வைத்துத் தூங்கும்போது தலையில் இருக்கும் அழுக்குகள் தலையணையில் தங்கி பல சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் அது முகத்தில் பட்டு முகப்பரு போன்ற சரும பிரச்னைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் தலையணை இல்லாமல் தூங்கினால் முகப்பரு பிரச்னை வரவே வராது.

4. நிம்மதியாகத் தூங்கலாம்: தலையணை வைத்துத் தூங்கும்போது தூக்கமின்மை பிரச்னை வருவது பொதுவானது. இரவு தூங்கும்போது உங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்றால் இன்றிலிருந்து தலையணை இல்லாமல் தூங்கப் பழகுங்கள். இதனால் இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்குவீர்கள் மற்றும் மறுநாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள்.

பரோட்டா மட்டும்தான் உடலுக்குக் கெடுதலா? அப்படியென்றால் இவையெல்லாம்…?

5. முதுகு வலி வராது: நாம் தலையணை வைத்துத் தூங்கும்போது நம்முடைய முதுகு தண்டும், தலையும் ஒரே மாதிரியாக இருக்காது. அதுவும் குறிப்பாக தலையணை உயரமாக இருந்தால் முதுகெலும்பு வளைந்து காணப்படும். அதாவது, இரவு தலையணையில் தூங்கும்போது காலையில் எழுந்தவுடன் முதுகு வலி, உடல் விறைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க தலையணை இல்லாமல் தூங்குவதுதான் நல்லது. இதனால் தலையும் மற்றும் முதுகெலும்பும் ஒரே நிலையில் இருக்கும். முதுகு வலியும் வராது.

தலையணை இல்லாமல் தலை சாய்த்துத் தூங்கினால் தாலாட்டுப் பாடி தூங்க வைப்பது போன்ற உணர்வைப் பெற முடிகிறதா என்பதை அனுபவித்துப் பாருங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online