மதுரையை 'தூங்கா நகரம்' என்று கூறுவார்கள். ஏனெனில், இரவு எந்நேரத்திற்குச் சென்றாலும் சுடசுட இங்கு உணவுகள் கிடைக்கும்.
மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் சூரிய அஸ்தமனத்திற்குள் மக்கள் உணவை எடுத்துக்கொள்வார்கள். பிறகு மின் விளக்குகள் வந்த பின்புதான் இரவு உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் வர ஆரம்பித்தது.
நம் உடலில் Circadian rhythm என்பது நாம் எப்போது தூங்குகிறோம், எழுகிறோம், ஹார்மோன்கள் ஆக்டிவாக இருப்பது போன்ற செயல்களை நிர்ணயிக்கிறது. இந்த Circadian rhythm ஒளியை வைத்தே இந்த செயல்களை செய்ய தீர்மானிக்கும். தற்போது செயற்கையாக மின் விளக்குகள் வந்ததால், அனைத்தும் மாறிவிட்டது. பல நூற்றாண்டுகளாகப் பழகி வந்த பழக்கம் மாறிவிட்டது.
உணவுடன் சேர்த்து சாப்பிடும் சாஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?இரவு விளக்குகள் அணையாமல் இருக்கும் காரணத்தால் Circadian rhythm ஆக்டிவாகவே இருக்கிறது. இதனால், தூங்குவதற்கான ஹார்மோனான மெலட்டானின் போன்றவை சுரப்பதில்லை. உணவையும் தாமதமாக எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள எல்லா ஹார்மோனும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதனால்தான் இரவு உணவை சாப்பிடுவது ஆபத்தானது. அதனால்தான் பெரும்பாலான நோய்கள் வருவதாக சொல்லப்படுகிறது.
இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது பசியை இது தூண்டுகிறது, உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது, பகல் நேரங்களில் செலவிடும் எனர்ஜியை குறைக்கிறது, சர்க்கரையை சமன்படுத்தக்கூடிய நிலையை மாற்றுகிறது, உணவு ஜீரணமாகும் தன்மை மாறுகிறது, ஓய்வு எடுக்கும்போது எரிசக்தி மாறுகிறது. இரவு தாமதமாக உணவு சாப்பிடுவதால் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், ஒரு நாள் உணவில் 50 சதவீதத்திற்கு மேல் இரவு உணவாக சாப்பிடுவது உடல் பருமனை பன்மடங்கு அதிகரிக்கும்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள், மாணவர்கள் போன்றவர்களால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, இரவு உணவை சாப்பிடக்கூடிய தன்மையை மாற்றினால் ஆரோக்கிக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மாவுச்சத்து உணவுகளுக்கு பதில் புரதம், காய்கறி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால், இன்சுலின் ஹார்மோன் அதிகம் தூண்டப்படாது.
இவ்வாறு செய்யும்போது இரத்த அழுத்தம் குறைகிறது, அதிகம் பசிப்பது குறைகிறது, இரத்தக் குழாயின் கடினத்தன்மை குறைகிறது, உணவை எரியும் தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, இரவு உணவை சரியானதாக எடுக்கும்போது சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, PCOD போன்ற பிரச்னைகள் சரியாவதை கவனிக்க முடிகிறது.
எனவே, இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் ஆபத்து என்றில்லை. அதை சரியான முறையில் சாப்பிடும்போது ஆரோக்கியமான மாற்றத்தை கண்கூடாகப் பார்க்க முடியும் என்பதே உண்மை.

