தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று விஜய் பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் முதன்முறையாக அரசியல் நுழையும் போது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தினாரோ? அதேபோன்று விஜய்யும் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தது. அந்த தேர்தலில் கணிசமான அளவில் வாக்குவங்கியை பெற்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் தலைமையிலான தேதிமுக கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக படுதோல்வி அடைந்து எதிர்கட்சி ஆகும் அந்தஸ்தையும் இழந்தது. அதனால் , விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு விஜயை விஜயகாந்துடன் ஒப்பிட்டு திமுகவின் வாக்குவங்கிக்கு , மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று தினகரன் பேசியுள்ளார்.
முத்து படத்தில் ரஜினிக்கு டூப் போட்ட பிரபல காமெடி நடிகர் இவர் தான்.. அவரே சொன்ன பதில்.!
