Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தன்னிறைவு: தனித்து நின்று வெல்லும் வாழ்வியல் ரகசியம்!

தன்னிறைவு: தனித்து நின்று வெல்லும் வாழ்வியல் ரகசியம்!

Kalki Online 2 months ago

ன்னிறைவு பெற்றவர்கள் மட்டும் தான் தனித்து நிற்கிறார்கள். மனித வாழ்க்கையில் மிகக் கடினமான ஒன்று தனியாக நிற்கும் தைரியம்.

எல்லோரும் கூட்டத்தில் செல்வது எளிது.

ஏனெனில் கூட்டம் பாதுகாப்பாகத் தோன்றும். ஆனால் உண்மையான முன்னேற்றமும், உண்மையான மாற்றமும், உண்மையான சிறப்பும் அடையும் மனிதர்கள் தன்னிறைவு மூலம் பிறரிடம் சாராமல் தங்கள் பாதையை தாமே உருவாக்குபவர்களே.

தன்னிறைவு என்பது ஒரு திறமை மட்டுமல்ல. அது ஒரு வலிமை, ஒரு அறிவு, ஒரு உள் அடக்கம், ஒரு வாழ்க்கை நெறி.

தன்னிறைவு மனிதர்களின் 10 ஆழமான உண்மைகள்.

1. தன்னிறைவு என்பது தனிமை அல்ல - தன்னை வளர்த்தல். தன்னிறைவு பெற்றவர் தனிமையில் இல்லை. அவர் தனிமையை பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருப்பவர். சத்தம் இல்லாத இடம் தான் சிந்தனையின் பள்ளி.

2. தன்னால் முடியும் என்ற நம்பிக்கை மிகப்பெரிய சொத்து. கைத்தொலைபேசி சார்ஜர் போல. பலர் பிறரின் ஊக்கத்திலே சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால் தன்னிறைவு பெற்றவர்கள், தங்கள் மனத்திலேயே சக்தியை உருவாக்குகிறார்கள்.

3.கூட்டம் உங்களை பாதுகாக்காது. தைரியம் தான் பாதுகாப்பு. அனைவரும் செய்யும் விஷயம் சரி என்பதில்லை. கூட்டத்தைப் பின்தொடர்வது எளிது. ஆனால் தன்னிறைவு மனிதர் அறிந்துகொள்வர். உண்மையான பாதுகாப்பு உங்கள் தீர்மானங்களில் தான் உள்ளது.

4. தனிப்பட்ட சிந்தனை அரிய திறமை. இந்த உலகத்தில் அதிக மக்கள் பின்பற்றுபவர்கள். ஆனால் முன்னோடிகள் யார்? தன் சிந்தனையைத் தானே கேட்டு, சரியான பதில் கண்டுபிடிப்பவர்கள்.

"நான் யார்?" - இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை ராயல் தான்!

5. குறை சொல்லும் கூட்டத்திலிருந்து விலகுதல். தன்னிறைவு கொண்டவர்கள், வாழ்க்கையை இழுத்தடிக்கும் கூட்டத்திலிருந்து விலகி, உயர்த்தக்கூடிய பாதையைத் தேடுகின்றனர்.

6. தோல்வியை தாங்கும் மனம் வெற்றியின் அடித்தளம். கூட்டத்தில் இருப்பவர்கள் தோல்விக்கு பயப்படுவார்கள். தன்னிறைவு கொண்டவர்கள் தோல்வியையே அவர்களை வெற்றியின் பக்கம் இழுக்கும் ஆசிரியராக மாற்றுவார்கள்.

7. முடிவெடுக்கும் திறன் தனிப்பட்ட வலிமை. தன்னிறைவு என்பது 'யாரைக் கேட்கலாம்?' என்பதல்ல, 'எனக்குத் தக்கது எது?' என்று கேட்டு முடிவு எடுப்பதற்கான உள்ஞானம்.

8. பிறர் வரவில்லை என்றால் பாதை நிற்காது. பலர் ஆதரவு கிடைக்காததால் நின்று விடுவார்கள். ஆனால் தன்னிறைவு மனிதர். தனியாக நடப்பதற்கே பாதை உருவாக்கப்பட வேண்டும் என்பதை அறிவார்.

9. ஒப்பீட்டிலிருந்து விடுபடும் சுதந்திரம். கூட்டத்தைப் பின்தொடர்பவர்கள் எப்போதும் பிறரை ஒப்பிடுவார்கள். தன்னிறைவு கொண்டவர் மட்டும். நேற்றைய தன்னையே எதிரியாகக் கொள்கிறார்.

'எல்லாம் முடிந்தது' என்று நினைப்பவர்களா நீங்கள்? இந்த ஒரு ரகசியத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்!

10. தனியாக நிற்கிறவர் நாளை தலைவராக நிற்பவர். இன்றைய தனிமையான முயற்சி, நாளைய பிரமாண்டமான வெற்றி. கூட்டம் பின்தொடர்பது ஒரு வழக்கம். ஆனால் கூட்டம் பின்பற்றும் வழியை உருவாக்குவது வீரர்களின் பணி.

தன்னிறைவு என்பது ஒரு சிறிய குணமல்ல. அது மனிதனின் முழுவதையும் உயர்த்தும் வாழ்க்கை ஆற்றல்.

கூட்டம் வரும் போது நடந்து பார்ப்பது எளிது. ஆனால் கூட்டம் வராதபோதும், தனியாகவும் நம்பிக்கையுடனும் ஒரு பாதையை உருவாக்கி செல்லும் மனிதர் அவர்தான் வாழ்க்கையின் நிஜ வெற்றியாளர்.

உங்கள் வெற்றி உங்கள் காலடியில் தான். உங்கள் தைரியம் தான் உங்கள் திசை, உங்கள் தன்னிறைவு தான் உங்கள் எதிர்காலம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online