Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தயாரிப்பாளர்கள் கேட்டாங்க.. முதல்வர் விஜய் ஓகே சொல்லிட்டாரு..! வெளியான முக்கிய அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் கேட்டாங்க.. முதல்வர் விஜய் ஓகே சொல்லிட்டாரு..! வெளியான முக்கிய அறிவிப்பு!

Kalki Online 2 days ago

தமிழ்நாட்டில் புதிதாக வெளியகும் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கான தடை 2023 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்தது.

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கோரி அண்மையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முதலவர் விஜயிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது.

அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட உத்தரவிட்டுள்ளார்.உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிடவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆறு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி :

தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீரென ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு: இனி குறைந்தபட்சம் ரூ.50! முழு கட்டணப் பட்டியல் இதோ..!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online